×
 

மியான்மர் நாட்டை திணற வைக்கும் பூகம்பங்கள்.. மீண்டும் இன்று குலுங்கிய கட்டடங்கள்..!

மியான்மர் நாட்டில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்கள் மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் சீட்டுக் கட்டுகள் போல அடுக்குமாடி குடியிருப்புகள் சரிந்து விழுந்த நிகழ்வுகள் காண்போரை பதைபதைக்க செய்தது. தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், வீடுகள் என எண்ணற்ற கட்டடங்கள் நில நடுக்கத்தால் உருக்குலைந்தன. 

குறிப்பாக தலைநகர் நேபிடா, மண்டலாய் உட்பட 6 மாகாணங்களில் பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. ஏற்கனவே ஏற்பட்ட 2 நிலநடுக்கங்கள் கடும் சேதத்தை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மீண்டும் நிகழ்ந்த நிலநடுக்கம் மியான்மர் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தியது. இதனால் சாலைகளிலேயே மக்கள் தஞ்சம் அடையும் நிலை ஏற்பட்டது. 

இதையும் படிங்க: விடாது துரத்தும் நிலநடுக்கம்! நேபாளத்தில் குலுங்கிய கட்டடங்கள்..! அரண்டு போன மக்கள்..!

மியான்மர் நாட்டு மக்களுக்காக இந்தியாவில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும், மருத்துவ உதவிகளுக்கு குழுவையும் அனுப்பி வைத்தது.

நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்தது. இந்த சோகம் மறைவதற்குள் மீண்டும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் பூமிக்கு 10 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உயிரிழப்புகள் மற்றும் சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதையும் படிங்க: மியான்மரில் தோண்ட தோண்ட கிடைக்கும் சடலங்கள்.. 3000-ஐ கடந்த பலி எண்ணிக்கை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share