பாலுக்கு பூனை காவலா? அதிமுக - பாஜக கூட்டணியை விளாசிய அன்பில் மகேஷ்!
பா.ஜ.க அ.தி.மு.க கூட்டணியால் சிறுபான்மையினருக்கு பாதிப்பு வராது என்று கூறுவது.. பாலுக்கும் காவல், பூனைக்கும் காவல் என்பது போல் இருப்பதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திமுக மாணவர் அணியின் மாவட்ட அமைப்பாளர்கள், மாவட்ட துணை அமைப்பாளர்களின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில், தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் ராஜீவ் காந்தி தலைமையில், மாநில துணைச் செயலாளர்கள் சோழராஜன், ஈரோடு வீரமணி முன்னிலையில் நடைபெற்றது. ஆய்வு கூட்டத்தில் தஞ்சை திருவாரூர் நாகை திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதனை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுவதும் 10 ம் வகுப்பு முடித்த மாணவ மாணவிகள் தி.மு.க மாணவரணியில் பல லட்சம் பேர் உறுப்பினராக இணைந்து வருகின்றனர் குறிப்பாக மாணவிகள் அதிக அளவில் இணைகின்றனர். அதற்கு நான் முதல்வன், தமிழ்ப்புதல்வன் திட்டங்களே காரணம் ஆகும் என்றவர், தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும் இது அமைந்துள்ளது என்றவர்.
இதையும் படிங்க: இதை பொறுத்துக்கொள்ள முடியாது... பொங்கியெழுந்த அமைச்சர் அன்பில் மகேஷ்
அதிமுக - பாஜக கூட்டணியால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்பது பூனைக்கும் காவல், பாலுக்கும் காவல் போன்றது இக்கூட்டணியை சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள் என்றார். அதிமுகவை சேர்ந்த 50 ஆண்டுகால இஸ்லாமிய உறுப்பினர் ஒருவர் மிகுந்த மன வருத்தத்தோடு கட்சியை விட்டு வெளியேறியுள்ளதே இதற்கு சாட்சி என்றார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீலமேகம், மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: பள்ளி வகுப்பறையில் உல்லாசம்..! சிதறியடித்து ஓடிய மாணவர்கள்..! அன்பிலின் அத்தை ஊரில் அட்டூழியம்..!