×
 

வீட்டை விட்டு வெளியே வந்த விஜய்..! அண்ணல் அம்பேத்கருக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் மரியாதை..!

அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது திருவுருவச்சலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார். சேலம் மாவட்டம் மறவனேரியில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி மரியாதை செலுத்தினார்.

இதேபோல் அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி, சென்னை பாலவாக்கத்தில் உள்ள அண்ணல் அம்பேத்கரின் சிலைக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார். இதுவரை தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவது என்றால் பனையூரில் தான் விஜய் மரியாதை செலுத்தி வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: தவெக முதல் பொதுக்குழு கூட்டம்.. மேடையில் அமர்ந்த 8 பேர் யார்..? யார்..?

 

இதையும் படிங்க: மக்களை மறந்த திமுக அரசின் பட்ஜெட்.. தவெக தலைவர் விஜய் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share