27 ஆண்டுகளுக்குப் பிறகு கதவை திறந்து விட்ட டெல்லி மக்கள்..! பரவசத்தில் குதிக்கும் பாஜக...!
பிப்ரவரி 5 ஆம் தேதி தேசிய தலைநகரில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது
பிப்ரவரி 5 ஆம் தேதி தேசிய தலைநகரில் 70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்ற இடங்களுக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்திய தேர்தல் ஆணையம் (EC) இதுவரை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) 41 இடங்களில் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் தற்போதைய ஆம் ஆத்மி கட்சி (AAP) 28 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
35 இடங்களின் பாதிக்கு மேல் வெற்றி பெறும் கட்சி டெல்லியைக் கைப்பற்றக்கூடும் என்ற நிலையில், ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கும் இடங்களிலும் தற்போது பின்னடைவைச் சந்தித்து வருகிறது.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் கட்சியை முடித்து விடுங்கள்..' டெல்லி தோல்வியால் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆவேசம்..!
முன்னிலை வகிக்கும் பாஜக:
புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான கருத்துக் கணிப்புகள், பாஜகவுக்கு முழுமையான பெரும்பான்மை கிடைக்கும் என்றும், 35 இடங்களுக்கு மேல் கைப்பற்றி டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடிக்கும் என்றும் தெரிவித்திருந்தது.
மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜகவிற்கும், 2013ம் ஆண்டு முதல் டெல்லியை ஆளும் ஆம் ஆத்மிக்கும் தலைநகரை கைப்பற்றுவது என்பது கெளரவ போராட்டமாக மாறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வாக்காளர்களை வெகுவாக கவர்ந்திருந்தாலும், அக்கட்சி வேட்பாளர்கள் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது பின்னடைவிற்கு காரணமாக அமைந்துள்ளது.
பாஜகவைப் பொறுத்தவரை, டெல்லியைப் பாதுகாப்பது தேர்தல் வெற்றியை விட முக்கியமானதாக கருதப்படுகிறது. 1998ம் ஆண்டிற்கு பிறகு தலைநகரைக் கைப்பற்றுவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பலமாக அமைந்துள்ளன. குறிப்பாக டெல்லி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர் பங்கேற்றது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
காணாமல் போன காங்கிரஸ்:
தேசிய அளவில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் போட்டியில் இருந்தாலும், இருக்கு ஆனா இல்ல... என்பது போல் பெரும் பின்னடைவில் உள்ளது. 1998 முதல் 2013 வரை டெல்லியை ஆட்சி செய்த காங்கிரஸ், ஊழல் குற்றச்சாட்டுகளால் பதவி நீக்கம் செய்யப்பட்டத, இதனால் வாக்காளர்கள் ஆம் ஆத்மி கட்சி பக்கம் திரும்பினர். அதன் பின்னர் ஆம் ஆத்மியை விட்டு காங்கிரஸ் பக்கம் திரும்பாத மக்கள் தற்போது பாஜக பக்கம் திரும்பியுள்ளனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்கு டெல்லியில் ஆப்பு..? அதிர வைக்கும் எக்ஸிட் போல் முடிவுகள்.!