2 குழந்தைகளை துடிக்கத் துடிக்க கழுத்தறுத்து கொன்ற தாய்; மாடியில் இருந்து குதித்து தற்கொலை!
இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு மாடியில் இருந்து குதித்து தாயார் தற்கொலை ஐதராபாத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ள
கஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர் ரெட்டி மற்றும் தேஜா (35) தம்பதியினர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்தனர். இந்த நிலையில் தேஜா தனது இரண்டு பிள்ளைகளையும் நேற்று மாலை கத்தியால் கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு, பின்னர் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், போலீசாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்ததும், ஜீடிமெட்லா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். இதில் தேஜாவும் அவரது மூத்த மகன் ஹர்ஷித் ரெட்டியும் (11) சம்பவ இடத்திலேயே இறந்து கிடந்தனர். இளைய மகன் ஆஷிஷ் ரெட்டி (9) உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கல்லால் தாக்கிய கொடூரம்.. கோமா நிலைக்கு சென்ற இளம்பெண்.. ஹைதரபாத்தில் கணவன் கைது..!
போலீசார் சம்பவ இடத்தை ஆய்வு செய்தபோது, தேஜா எழுதிய ஆறு பக்க தற்கொலைக் கடிதத்தை கண்டுபிடித்தனர். அந்தக் கடிதத்தில், தனது கணவர் வெங்கடேஸ்வர ரெட்டி மீது தனக்கு கோபம் இருப்பதாகவும், கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதற்குக் காரணம் தேஜாவின் கண் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகள், குழந்தைகளின் உடல்நிலை மற்றும் தேஜாவின் குடும்பத்தில் இருந்த உளவியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக இந்த கொடூர சம்பவத்தில் ஈடுப்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தேஜா எப்படி தன்னையும் தன் குழந்தைகளையும் கொல்லும் நிலைக்கு வந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு முழு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: இரண்டாம் இன்னிங்ஸ் தொடங்க விரும்பிய இளைஞர்.. டேட்டிங் ஆப் மூலம் ரூ.6 கோடியை சுருட்டிய பெண்.. சைபர் கிரைம் உஷார்!!