தாய்மொழியில் தொழில்நுட்ப கல்வி பாடப்புத்தகங்கள்..! ஏஐசிடிஇ அழைப்பு..!
இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க விரும்பும் ஆசிரியர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ., அழைப்பு விடுத்துள்ளது.
தாய்மொழியில் கல்வி கற்பது ஒருவரின் சிந்திக்கும் திறன், மொழித்திறன், கலாச்சார புரிதலை ஊக்குவிக்கிறது. தாய் மொழியில் கல்வி கற்கும் போது சிந்திக்கவும், கருத்துக்களை வெளிப்படுத்தவும், கேள்விகளை எளிதாக முன்வைக்கவும் முடியும். தாய் மொழியில் கல்வி கற்பதால் பல்வேறு கண்டுபிடிப்புகள் அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆனால் நமது நாட்டில் உயர்கல்வியில் ஆங்கில மொழியே அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்று கூறலாம். தொழில்நுட்ப பாடங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பதை இதற்கு காரணம் என்றும் சொல்லலாம். இதனால் தாய்மொழியின் உயர்கல்வி பயிர நினைக்கும் மாணவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது.
அமைதியான மற்றும் நிலையான சமூகத்திற்கு கலாச்சாரம், மொழியியல், பன்மொழியின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக யுனெஸ்கோவால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் தேதி சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளி படிப்பின் ஆரம்ப காலத்தில் இருந்தே தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வியை ஆதரித்து யுனெஸ்கோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பள்ளிப்படிப்பின் ஆரம்ப ஆண்டுகளிலிருந்தே தாய்மொழி அடிப்படையிலான பன்மொழிக் கல்வியை யுனெஸ்கோ முன்னெடுத்து வருகிறது, அதை ஆதரித்து வருகிறது .
இதையும் படிங்க: ரயில் டிக்கெட்டை வைத்து வேறொரு ரயிலில் பயணம் செய்யலாம்.. இந்த விதி உங்களுக்கு தெரியுமா?
பெரும்பாலான மாணவர்களுக்கு தாய்மொழி தவிர வேறு மொழியில் கற்பிக்கப்படுகிறது. இது அவர்களின் கற்கும் திறனை பாதிக்கிறது என்றும் உலக மக்கள் தொகையில் 40% பேருக்கு அவர்கள் பேசும் அல்லது புரிந்து கொள்ளும் முறையில் கல்வி கிடைப்பதில்லை என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, ஏ.ஐ.சி.டி.இ., இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் தொழில்நுட்ப கல்வி புத்தகங்களை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை, கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.
இதுவரை தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் 700 க்கும் மேற்பட்ட பாடப்புத்தகங்களை தயாரித்துள்ள நிலையில், இன்ஜினியரிங் டிப்ளமோ வகுப்புகளுக்கு முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுக்குரிய புத்தகங்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கின்றன. தற்போது நாட்டில் உள்ள 22 மொழிகளுக்கும் அனைத்து தொழில்நுட்ப பாடங்களையும் தயாரிக்கும் முயற்சியில் ஏ.ஐ.சி.டி.இ இறங்கியுள்ளன.
இந்த முயற்சியில் பங்கேற்க பல்கலைக்கழகம், கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்கள் தயாரிக்க விரும்பும் ஆசிரியர்கள் ஏ.ஐ.சி.டி.இ.,யின் https://www.aicte-india.org தளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பெண் ரயில் பயணிகளுக்கு வந்த குட் நியூஸ்.. ஒவ்வொரு ரயிலிலும் இனி இதுதான்.!!