×
 

வதந்தியால் நடந்த கோரம்..!  ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணிகள்.... 10 பேர் பலி... 30 பேரின் நிலை என்ன? 

மகாராஷ்டிராவின் ஜல்கானில் சற்று நேரத்திற்கு முன்பு கோர விபத்து அரங்கேறியுள்ளது. இதில் ஏற்கனவே 10 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படு

மகாராஷ்டிராவின் ஜல்கானில் சற்று நேரத்திற்கு முன்பு கோர விபத்து
அரங்கேறியுள்ளது. இதில் ஏற்கனவே 10 பேர் பலியாகியிருப்பதாக கூறப்படும்
நிலையில், மேலும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

லக்னோவிலிருந்து மும்பைக்குச் செல்லும் புஷ்பக் எக்ஸ்பிரஸில் தீ விபத்து
ஏற்பட்டதாக ஒரு வதந்தி பரவியுள்ளது. இதனால், ரயிலில் பயணித்த பயணிகள்
பயந்து போய் ஓடும் ரயிலில் இருந்து குதிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது
பக்கத்து தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்த கர்நாடக எக்ஸ்பிரஸ் மீது குதித்த
நபர்கள் அனைவரும் மோதியுள்ளனர். தீ விபத்து வதந்தியால் பீதியடைந்து 30 முதல்
40 பேர் வரை புஷ்பக் எக்ஸ்பிரஸில் இருந்து குதித்ததாக தெரிகிறது. 

இதில் 10 பேர் ரயில் மோதிய வேகத்தில் உடல் சிதறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
மேலும் 30 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகாத நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த விபத்து ஜல்கானின் பச்சோரா தாலுகாவின் பர்தாடே கிராமத்திற்கு
அருகில் நடந்துள்ளது. 

இதையும் படிங்க: பெண் மருத்துவர்கள் பற்றாக்குறையால் மாதவிடாய் பற்றி ஆலோசிப்பதை தவிர்க்கும் 90% பெண்கள் : ஆய்வில் தகவல்...


வதந்தியால் வந்த வினை: 

ரயிலின் B4 பெட்டியில் தீப்பொறி ஏற்பட்டுள்ளது, இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் ரயிலில் தீப்பற்றியதாக வதந்தி பரப்பியுள்ளனர். 'பிரேக்-பைண்டிங்கில் தீப்பொறியைப் பார்த்த பயணிகள் உடனடியாக ரயிலின் சங்கிலியைப் பிடித்து இழுத்து பக்கத்து தண்டவாளத்தில் குதித்துள்ளனர். அப்போது மறுபக்கம் வந்த ரயில் மோதியதில் ஏராளமான பயணிகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மகாராஷ்டிர அமைச்சர் குலாப் ராவ் பாட்டீல், எஸ்பி, கலெக்டர், நாசிக் கோட்ட ஆணையர் பிரவீன் கெடம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு வருகின்றனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் இதுவரை 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 
 

இதையும் படிங்க: அதானியை ஆட்டிப்பார்த்த ஹிண்டன்பர்க் நிறுவனம் மூடல்! அதானி பங்குகள் மதிப்பு 9% உயர்வு..

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share