காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்; திருமணம் செய்து வைக்க மறுத்ததால் நடந்த வெறிச் செயலா?
கேரளாவில் காதலி உள்பட 6 பேரை கொலை செய்த கொடூரன்
நெஞ்சை நொறுங்க வைக்கும் செய்திதான்.. சில நேரங்களில் கற்பனை கதை கொண்ட சினிமாவில் கூட வராத காட்சிகள் நிஜ வாழ்க்கையில் அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
அதுபோல் அரிதினும் அரிதான அபூர்வ கொலை நிகழ்வு இது. நமது பக்கத்து மாநிலமான கேரளாவில் நடந்துள்ளது. அதற்கான காரணம் பற்றி மாறுபட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் காதலித்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க மறுத்தது தான் பிரதான காரணம் என்று போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
காதலி மற்றும் தனது குடும்பத்தில் பாட்டி, தாய் தம்பி உட்பட 6 பேரை கொடூரமாக கொலை செய்த அந்த இளைஞன் பெயர் அஃபான். வயது 23.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தை அலறவிடும் ஹெல்மெட் திருடன்.. ஒரே நிமிடத்தில் ஸ்கூட்டி அபேஸ்..!
கேரள தலைநகர் திருவனந்தபுரம் வெஞ்சார மூட்டில் தனது தாய் தம்பி மற்றும் காதலி உட்பட 6 பேர்களை அவன் கொலை செய்திருக்கிறான். இந்தக் கொலைகள் ஒரே இடத்தில் இல்லாமல் மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றதால் விசாரணையில் சிக்கல்கள் ஏற்பட்டன.
மேலும் கொலையாளி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாலும், உயி பிழைத்துக் கொண்டார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய வாக்குமூலம் முழுமையாக கிடைத்தால் தான் இந்த கொலை பின்னணி பற்றிய அனைத்து தகவல்களும் தெரியவரும்.
இதுவரை நடந்த விசாரணை கிடைத்த தகவல்கள் :-
கொலைகள் நடந்த வீடு வெஞ்சாரமூடு - நெடுமங்காடு சாலையில் பெருமாள சந்திப்புக்கு அருகே அமைந்துள்ளது அவருடைய தந்தை ரஹீம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீட்டை கட்டினார். வளைகுடாவில் உதிரி பாகங்கள் கடை நடத்தி வரும் ரஹீம், நிதி நெருக்கடியை எதிர் கொண்டதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக வீடு திரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. அஃபான் தனியாகவும் குடும்ப உறுப்பினர்களுடனும் அவ்வப்போது வெளிநாடு சென்று வந்திருக்கிறார்.
தெம்பம் மூட்டில் உள்ள ஜனதா மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் டூ படிப்பை முடித்த பிறகு தனது பட்டப் படிப்புக்காக வேறு ஒரு கல்லூரியில் அவர் சேர்ந்திருந்தார். ஆனால் பட்டப்படிப்பை இறுதிவரை அவர் முடிக்கவில்லை. ஈக்கம் பக்கத்தில் அவரைப் பற்றி விசாரிக்கும் போது கூட யாருக்குமே அவரைப் பற்றி முழுமையாக எந்த விவரமும் தெரிந்திருக்கவில்லை. அடிக்கடி தாமதமாக வீட்டுக்கு வரும் பழக்கம் கொண்டவர் அவர்.
இரண்டு மணி நேரத்திற்குள் செய்யப்பட்ட இந்த குடும்ப கொலைகளுக்காக ஏறத்தாழ 34 கிலோமீட்டர் தூரம் அவர் பயணம் செய்திருக்கிறார்.
கொலை செய்யப்பட்டவர்கள் ஆபானின் தம்பி அப்சான், அவருடைய தந்தை வழி மாமா லத்தீப் , லத்தீப் பின் மனைவி ஷாகிதா, அவருடைய 95 வயது பார்ட்டி சல்மா பீவி மற்றும் கொலையாளியின் காதலியான பர்சானா ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொலை முயற்சியில் படுகாயம் அடைந்த அஃபானின் தாயார் ஷெமி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள சிகிச்சை பெற்று வருகிறார்.
இத்தனை கொலைகளையும் இரண்டு மணி நேரத்திற்குள் செய்து முடித்த ஆஃபான் மாலை 7 மணி அளவில் வெஞ்சாரமோடு காவல் நிலையத்திற்குள் சென்று மிகச் சாதாரணமாக தான் ஆறு கொலைகளை செய்திருப்பதாக ஒப்புக்கொண்டு சரணடைந்தார். முதலில் அதிகாரிகள் அவர் சொல்வதை நம்பவில்லை. ஆனால் யார் - யாரை எங்கு ,எப்போது, எப்படி கொலை செய்தேன் என்று அவன் விளக்கம் அளித்த போது போலீசார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
வெஞ்சாரமோடு பெருமாளயில் மூன்று பேரையும் சுல்லாலத்தில் இரண்டு பேரையும் பாங்கோட்டில் ஒருவரையும் கொலை செய்ததாகஅவன் ஒப்புக் கொண்டான். போலீசாரிடம் அவன் அளித்த வாக்குமூலம் குறித்து அட்டிங்கல் உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அதன் பிறகு டிஎஸ்பி போலீஸ் நிலையத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடர்ந்து நடத்தினார். அதன் பிறகு நடத்தப்பட்ட ஆய்வு, ஐந்து பேர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது.
பெருமாளயில் 3 பேரை கொன்றதாக அவன் கூறியிருந்தான். ஆனால் ஆய்வு செய்தபோது அந்த இடத்தில் இரண்டு உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. ஒருவர் படுகாயம் அடைந்தார். அவருடைய பாட்டி சல்மா பீபி முதலில் கொல்லப்பட்டவர்.
மாலை 5.30 மணிஅளவில் இந்த கொலை நடந்துள்ளது முதலில் அவளை கொன்றுவிட்டு பின்னர் எஸ் என் புரத்திற்கு சென்று அங்கு தனது தந்தை வழி மாமா லத்தீப்பையும் லத்தீபின் மனைவி ஷாகிதாவையும் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது.
பின்னர் அவர் தனது சொந்த வீட்டிற்கு திரும்பினார். அங்கு மற்ற கொலைகளை அவர் அரங்கேற்றினார்.
கிராமமே அதிர்ச்சி
தாழே பாங்கோடில் உள்ள வயதான சல்மா பீவி கொலை செய்யப்பட்டது அந்த சிறிய கிராமத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திங்கள்கிழமை மாலை ஐந்து முப்பது மணி அளவில் வீட்டுக்கு வந்த அவருடைய மகள் சமய அறையில் சல்மா பீவியின் உடலைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடலை சுற்றி கட்டி கட்டியாக ரத்தம் உறைந்து இருந்தது. மேலும் அவருடைய தலையின் பின்பக்கத்தில்ஆழமான காயம் இருந்தது அவர் கீழே விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இறந்திருக்கலாம் என்று ஆரம்பத்தில் சந்தேகப்பட்டார்கள். இருப்பினும் வெஞ்சாரமோடு காவல் நிலையத்தில் அஃபான் சரணடைந்த போது கொலைகள் அனைத்தும் வெளிப்பட்டு புதிய திருப்பத்தை எட்டியது, இந்த வழக்கு.
சல்மா தேவியின் 11 குழந்தைகளில் இளையவரான ரஹீமின் மகன்தான் இந்த கொலையாளி அஃபன். அவன் அடிக்கடி பாட்டியை பார்க்க அங்கு வருவது வழக்கம். பாட்டிக்கு பேரன் மீது தனியான பாசம் இருந்தது. அவர் வரும் போதெல்லாம் பேரனுக்கு பணம் கொடுப்பது அந்த பாட்டியின் வழக்கம்.
திங்கட்கிழமை காலை அவன் மீண்டும் அவளுடைய வீட்டுக்கு சென்று அடகு வைப்பதற்காக பாட்டியின் நகைகளை கேட்டிருக்கிறான். அவள் கொடுக்க மறுத்ததால் முதலில் அவளைக் கொன்று ஊருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மாமாவும் அத்தையும்..
வீடு தனிமையான இடத்தில் இருந்ததால் லத்தீப் மற்றும் ஷாகிதாவின் மரணச் செய்தி ஊடகங்கள் மூலம் அண்டை வீட்டாரை எட்டியது. அபானின் தந்தை வழி மாமாவான லத்தீப் தனது சகோதரர் வெளிநாட்டில் இல்லாத போது குடும்ப விவகாரங்களை நிர்வகித்து வந்தார்.
லத்தீன் உடல் ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது அதே நேரத்தில் அவருடைய மனைவி ஷாகிதா சமையல் அறையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
கொலைக்கு முன்பாக பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் திருமண அழைப்பிதழ் கொடுக்க அவர்கள் வீட்டுக்கு வந்த போது அவர்கள் இருவரும் நன்றாகவே இருந்திருக்கிறார்கள்.
ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த லத்தீப் அதிகமாக வெளியே செல்வதில்லை. நேற்று இரவு 11 மணி அளவில் அந்த இடத்திற்கு வந்த போலீசார் அந்த வீட்டை பூட்டி சீல் வைத்தனர். இன்றும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
சந்தேகங்களை எழுப்பும் தம்பியின் கொலை
கொலை செய்யப்பட்டவர்களில் அஃபானின் அன்பு தம்பியும் ஒருவன். தம்பி மீது அண்ணன் கொண்டிருந்த பாசத்தை நண்பர்கள் நினைவு கூர்கிறார்கள். 10 வயது இளையவரான தம்பியை அஃபான் அடிக்கடி அவரை தன்னுடைய பைக்கில் மசூதி மற்றும் பிற இடங்களுக்கு அழைத்துச் செல்வார் .
சகோதரர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி பகிரப்பட்டன. அவருடைய தம்பியின் கொலைக்கான காரணம் தெளிவாக தெரியவில்லை.
காதலியின் துயர முடிவு
அஃபானின் காதலி பர்சானாவின் மரணம் குறித்து திங்கட்கிழமை இரவு தான் அவருடைய குடும்பத்திற்கு எட்டியது. தொடக்கத்தில் இது பற்றி ஒரு விபத்து என்று தான் அவர்களிடம் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் பர்ஸானாவின் மரணம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஏற்கனவே ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்திருந்தனர். அவருடைய தாயார் ஸ்ரீஜாவுக்கு இந்த சோகம் குறித்து உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.
ஸ்ரீஜா தனது மகள் இருக்கும் இடம் பற்றிதொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். ஆனால் யாரும் அவளுக்கு தெளிவான பதில் அளிக்கவில்லை. இரவு 9 மணி அளவில் மோசமான நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தில் அவர் அழுது கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவளை ஆறுதல் படுத்த முயன்றார்கள்
ஆனால் வெளியே கூடி இருந்த பெரிய கூட்டமும் அவர்களின் முகங்களில் இருந்த துயரமும் அவளுடைய அச்சத்தை மேலும் அதிகமாக்கியது. பர்சனா அந்த பகுதியில் நன்கு அறியப்பட்டவர் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகளுக்கு டியூஷன் வகுப்புகளை நடத்தி வந்தார்.
திங்கட்கிழமை மாலையில் நடந்து முடிந்து விட்ட சோகத்தை அறியாமல் பல குழந்தைகள் டீச்சரின் வருகைக்காக காத்திருந்தது மனதை பிழிவதாக இருந்தது. ஆபானும் அடிக்கடி அங்கு வந்து செல்வார். பெரும்பாலும் இரு சக்க வாகனத்தில் தான் அவர் அங்கு வருவது வழக்கம்.
கொலையாளியின் மனம் நல பாதிப்பு காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே கொலையாளியிடம் விசாரணை நடத்திய பிறகு தான் இந்த கொலைக்கான பின்னணி குறித்து தெளிவாக தெரிய வரும். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்
இதையும் படிங்க: குளிர்பானத்தில் மயக்க மருந்து..! ஆடைகளைக் கழற்றி வீடியோ..! இளம் பெண்ணை நாசமாக்கிய வேலூர் சம்பவம்