×
 

அறநிலையத்துறை இல்ல அரமற்ற துறை..! ஊழலில் ஊறிக் கிடப்பதாக சீமான் ஆவேசம்..!

பல்லாயிரம் கோடிகள் ஊழலில் ஊறி திளைத்து அறமற்ற துறையாக தமிழ்நாடு அறநிலையத் துறை உள்ளதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலை மக்கள் வழிபடத் திறக்காவிட்டால் நாம் தமிழர் கட்சி ஆலய நுழைவு போராட்டத்தை முன்னெடுக்கும் என்று நாங்கள் அறிவித்தபிறகு, இன்னும் ஒரு வாரத்தில் கோயில் திறக்கப்படும் என அறிவித்துள்ள அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கோயில் திறக்கவிருப்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு, நாம் தமிழர் கட்சி அரசியல் செய்வதாகப் போகிறபோக்கில் குற்றஞ்சாட்டியுள்ளார் என தெரிவித்தார்.

அரசு கோயிலைத் திறக்கவிருப்பது முன்கூட்டியே எங்களுக்குத் தெரியுமென்றால், நாம் தமிழர் கட்சி போராட்டத்தை அறிவிக்கும்வரை மேல்பாதி கோயில் விரைவில் திறக்கப்படும் என்பதை ஏன் அரசு அறிவிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். மேல்பாதி கோயிலைப் போன்றே தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பல நூறு கோயில்கள் திறக்கப்படாமலும், தேரோட்டம், திருவிழாக்கள் நடத்தப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் உண்மையிலேயே திமுக அரசிற்கு அக்கறை இருந்திருந்தால் மக்கள் வழிபடுவதற்காக அவற்றையெல்லாம் திறக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்றும் இதிலிருந்தே கோயிலை வைத்து அரசியல் செய்வது திமுகவா அல்லது நாம் தமிழர் கட்சியா என்பதை மக்கள் தெளிவாக அறிந்து கொள்வார்கள் எனவும் கூறினார். 

இதையும் படிங்க: அது இலவசம் இல்லைங்க.. அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா சொன்ன சூப்பரான விஷயம்..!

பெரும் செல்வந்தர்கள் வசமுள்ள பல்லாயிரம் ஏக்கர் கோயில் நிலங்களை இதுவரை மீட்காதது ஏன்? கோயில் பணம் பல்லாயிரம் கோடிகள் கொள்ளை போவதைத் தடுக்காது, கோ பூஜை நடத்துவதும், பள்ளிக்கூடம் நடத்தவே பணம் இல்லாதபோது பசு மடம் கட்டுவதும்தான் திராவிட மாடலா? தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டுமென்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் தமிழ்நாடு அரசு தடை விதிப்பது ஏன்? தமிழில் குடமுழுக்குக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராடினால் காவல்துறை மூலம் தடுத்து, தாக்குவது ஏன்? என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்று அறிவிப்புப் பலகை மட்டும் வைத்துவிட்டு பல நூறு கோயில்களில் அது நடைமுறையில் இல்லாமல் இருப்பது தான் உரிமையைப் பெற்றுக் கொடுத்த முறையா? இதுதான் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியா என கேள்வி எழுப்பினார். பிற மாநில கோயில்களுக்கு பல்லாயிரம் தமிழர்கள் வழிபடச்செல்லும் நிலையில், அங்கெல்லாம் தமிழில் அறிவிப்புப்பலகை ஏதும் வைக்கப்படாதபோது, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அறநிலையத்துறை சார்பாக தெலுங்கில் அறிவிப்புப் பலகை வைத்திருப்பதும் ஏன்? யாரை மகிழ்விப்பதற்காக இந்த அறிவிப்பு? இதுதான் திமுக அரசு கடைபிடிக்கும் இருமொழி கொள்கையா? என சாடினார்.

தமிழ்நாடு அறநிலையத்துறையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் ஊழல்கள், கொள்ளைபோகும் பல்லாயிரம் கோடி கோயில் வருமானம் குறித்த தகவல்கள் அனைத்தும் அமலாக்கத்துறை விசாரணை மூலம் வெளிச்சத்திற்கு வந்தால் இந்த நாடு தாங்காது என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நீட் எதிர்ப்பை முழுமனதோடு கடைபிடிக்கிறது திமுக அரசு.. திருமா பாராட்டு பத்திரம்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share