பாஜக தலைவராகும் நயினார் நாகேந்திரன்... தொண்டர்களுக்கு தயாராகும் தடபுடல் விருந்து...!
தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பதவி ஏற்க உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
பாஜகவினுடைய மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் இன்று பதவி ஏற்க இருக்கிறார். அதிமுகவில் பல ஆண்டு காலம் இருந்தவர் அங்கு அமைச்சராக கூட இருந்திருக்கின்றார். மின்சாரத்துறை போக்குவரத்து துறைகளை கவனித்திருக்கிறார். அதன் பிறகு அந்த கட்சி தலைவர்களுடன் ஏற்பட்ட அந்த கருத்து முரண்பாடு காரணமாக பாஜகவில் 2017ல் இணைந்து பிறகு கட்சிப் பணியாற்றி, சட்டமன்ற உறுப்பினராகி தற்போது பாஜகவினுடைய மாநில தலைவராக அவர் உயர்ந்திருக்கின்றார். இன்றைய தினம் 4 மணிக்கு அவர் பதவி ஏற்றுக் கொள்ள இருக்கிறார்.
வழக்கமாக அதிமுகவினுடைய பொதுக்குழு கூட்டம் நடைபெறக்கூடிய வானநகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்திலே தான் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தடபுடலாக தயாராகி வருகிறது. நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றாலும் கூட காலையிலே சுமார் 200, 300 பேர் வந்திருக்கின்றார்கள், அவர்களுக்கு சுடசுட மதிய உணவு தயாராகி வருகின்றது. இது தவிர மாலை பதவியேற்பு விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: இனி அடிக்கிறதெல்லாம் சிக்ஸர்தான்... அண்ணாமலையின் ஆக்ரோஷ அரசியல்... அடுத்த அதிரடிக்குத் தயார்..!
அவர்களுக்கு தேவையான உணவுகளும் தயாராகி வருகின்றது. இந்த மண்டபம் முழுவதும் பாஜகவினுடைய கொடிகள், தோரணங்கள், வரவேற்பு பதாகைகள், பேனர்கள் போன்றவை எல்லாம் வைக்கப்பட்டுள்ளது. மண்டபம் சுற்றி இருக்கக்கூடிய சுமார் அரை கிலோமீட்டர் தூரத்திற்கு வரவேற்கக்கூடிய வகையில் பாஜக கொடிகளைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
பாஜகவை புகழும் வகையிலான பல வசனங்கள் எழுதி பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்பட்டு நாற்காலிகள் அலங்காரம் செய்யக்கூடிய பணிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் அங்கு தடபுடலாக மிகுந்த ஒரு கலை நயத்தோடு பல நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அம்மா விசுவாசி டு அமித் ஷா தளபதி - யார் இந்த நயினார் நாகேந்திரன்?