×
 

கூட்டணி ஆட்சி..? பதில் அளிக்க மறுத்த நயினார் நாகேந்திரன்..!

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரனுக்கு சென்னை கமலாலயத்தில் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்டோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது:

தன்னை தமிழக பாஜக தலைவராக தேர்ந்தெடுத்த பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.என்னைப் போட்டியின்றி தேர்வு செய்த பாஜகவின் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் எனது உடன்பிறவா சகோதரர் அண்ணாமலை, வானதி ஸ்ரீனிவாசனுக்கு நன்றி. 

என் மக்கள் யாத்திரையில் எழுச்சி தெரிந்ததாகவும், தமிழகத்தில் ஆளும் திமுகஆட்சியை அகற்ற வேண்டும். உலகத்திலேயே மிகப்பெரிய ஊழல் கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். அந்தக் கட்சியோடு தான் திமுக கூட்டணி வைத்துள்ளது. இவர்கள் தான் மாநில சுயாட்சியை கேட்கிறார்கள். 

இதையும் படிங்க: பள்ளி சிறார்கள் கையில் பயங்கர ஆயுதங்கள்.. சட்ட ஒழுங்கை குறை கூறிய நயினார் நாகேந்திரன்!!

தமிழ்நாடு முழுவதும் இளைஞரணி சார்பில் போராட்டம் நடைபெறும்., எனவே அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். மேலும் அமைச்சர் பொன்முடியை கண்டித்து மகளிர் அணியினரும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.

பாஜக என்பது சமூக நீதிக்கான கட்சி, கிளை தலைவர் மாநில தலைவராகவும், மாநில தலைவர் தேசிய தலைவராகவும் ஆக முடியும். ஆனால் தமிழ்நாட்டில் அப்படி இல்லை., திமுக குடும்ப ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது., களைஞருக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் அடுத்து, ஸ்டாலினுடைய பேரனும் தலைவனாக தான் போகிறார்., திமுகவின் மூத்த நிர்வாகிகளுக்கு இடமில்லை.

திமுகவை அகற்ற வேண்டும் என மக்களிடையே காணப்படும் எழுச்சி 2026 ல் நனவாகும்.. 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக டெபாசிட் வாங்காது… இவ்வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். கூட்டணி ஆட்சி விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பிய போது அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளிக்க மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க: எல்லாவற்றிலும் இந்தி இந்தி.. ஆதங்கத்தை கொட்டி தீர்த்த சு.வெங்கடேசன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share