பாஜகவில் சேர்ந்த உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு புதிய பதவி
மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரோஹித் ஆர்யாவை ஒரேதேசம், ஒரே தேர்தல் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளராக பாஜக நியமித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ரோஹித் ஆர்யா ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெற்ற அடுத்த 3 மாதங்களில் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த ரோஹித் ஆர்யாவுக்கு உடனடியாக புஷ்யமித்ரா பார்கவா என்ற பதவியை மாநில தலைவர் விஷ்ணு தத் ஷர்மா வழங்கினார் என்று தி இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்துள்ளது.
ஓய்வுக்குமுன் ரோஹித் ஆர்யா பல்வேறு வழக்குகளில் தீர்ப்புகள் வழங்கியுள்ளார், அதில் பல தீர்ப்புகள் தலைப்புச் செய்திகளாகி, சில தீர்ப்புகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளன.
இந்தூரில் கொரோனா விதிகளை மீறியதாகவும், மதஉணர்வுகளை புண்படுத்தியதாக நகைச்சுவை நடிகர்கள் முனாவர் பரூக்கி, நலின் யாதவ் இருவருக்கும் ஜாமீன் வழங்க அப்போது நீதிபதியாக இருந்த ரோஹித் ஆர்யா மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் அளித்த தீர்ப்பில் “ இந்திய மக்களின் மத உணர்வுகளை உள்நோக்கத்தோடு நோகடித்துள்ளனர்” என நீதிபதியாக இருந்த ஆர்யா குறிப்பிட்டிருந்தார்.
அதுமட்டுமல்லாமல் ஒரு பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு ஜாமீன் வழங்கி, நீதிபதியாக இருந்த ஆர்யா உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல், ரக்ஸாபந்தன் பண்டிகை அன்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, குற்றம்சாட்டப்பட்டவர் ராக்கி கயிறு அணிய வேண்டும், இதை நீதிமன்றத்தில் தனது கண்முன் நிகழ்த்த வேண்டும் என ஆர்யா தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது, உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பில் தலையிட்டு, பல்வேறு உத்தரவுகளையும், வழிகாட்டுதல்களையும் கீழ் நீதிமன்றங்களுக்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர்கள் ஓய்வு காலம் முடிந்த சில மாதங்களில் பாஜகவில் சேர்வதும் அவர்களுக்கு எம்.பி. பதவி, ஆளுநர் பதவி வழங்குவது தொடர்ந்து வருகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த சதாசிவத்துக்கு ஆளுநர் பதவியும், ரஞ்சன் கோகாய்க்கு எம்.பி. பதவியும் பாஜக வழங்கியது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. அப்துல் நசீர் ஆந்திரப் பிரரதேச ஆளுநராகவும், முன்னாள் நீதிபதி அசோக் பூஷன் என்சிஎல்ஏடி தலைவராகவும் நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “காத்திருந்து...காத்திருந்து...” அண்ணாமலை சொன்னதை நம்பி பட்டாசு, ஸ்வீட் உடன் காத்திருந்து ஏமாந்த விவசாயிகள்!