×
 

திமுகவின் வியூக வகுப்பாளராக இணையும் STC..? பிரசாந்த் கிஷோரின் சகா ராபின் ஷர்மா..!

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் வியூக வகுப்பாளராக ராபின் ஷர்மாவும் அவரது STC நிறுவனமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் வியூக வகுப்பாளராக பிரஷாந்த் கிஷோரின் சகாவான ராபின் ஷர்மா இணைகிறார். இவரது Showtime நிறுவனம் திமுகவின் வியூக வகுப்புக்கு ஒப்பந்தம் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் ஒரு காலத்தில் வியூக வகுப்பாளர்களாக விளங்கி வந்த நிலையில் தற்கால அரசியலில் மக்களை கவர, தங்களை உயர்த்தி காண்பிக்க அரசியல் கட்சிகளுக்கு வெளியிலிருந்து மூளை கடனாக தேவைப்படுகிறது. அப்படி உருவானதுதான ஸ்ட்ரேடஜி டீம்கள். மேலை நாடுகளில் அரசியல் கட்சித்தலைவர்கள் தங்களுக்காக உருவாக்கிய இத்தகைய டீம்கள் கான்செப்ட் மெல்ல இந்தியாவுக்குள் நுழைய ராகுல், மோடி இருவரும் அதை கைக்கொள்ள ஆரம்பித்தனர்.

மாநிலத்தில் பெரிய பணக்கார கட்சிகளும் இதை பின்பற்ற தமிழகத்திலும் இந்த கலாச்சாரம் பரவ ஆரம்பித்தது. 

ஜெயலலிதா, கலைஞர் இருக்கும்போதே 2016 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்காக சுனில் வேலை செய்தார், அன்புமணிக்காக ஜான் ஆரோக்கியசாமி வேலை செய்தார். நமக்கு நாமே, மாற்றம்.முன்னேற்றம் அன்புமணி கான்செப்ட் எல்லாம் அப்படி வந்ததுதான்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை விவகாரம்; அதிரடி காட்டும் அண்ணாமலை... மதுரை To சென்னை மகளிர் பேரணி

அதன் பின்னர் சுனில் விலக ஆதவ் அர்ஜுன் பிரசாந்த் கிஷோரை திமுக பக்கம் அழைத்து வந்தார். சுனில் அதிமுகவுக்காக வேலை செய்தார்.

பிரசாந்த் கிஷோரின் ஐபேக் வந்தப்பின் திமுகவின் பிரச்சார உத்தியே மாறியது. 2019,2021 தேர்தல் வெற்றிக்கு இந்த ஐபேக் அணி காரணமாக இருந்தது. அதன் பின்னர் பிரஷாந்த் கிஷோர் ஐபேக் ஆந்திரா பக்கம் போனார். திமுக ஐபேக் ஆட்களை வைத்து மருமகன் மூலம் PEN என்கிற அமைப்பை உருவாக்கினார்கள். அதை ஆதவ் அர்ஜுன் கவனித்து வந்தார். அதன் மூலம் 2024 தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றார்கள்.

பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தவர் ராபின் ஷர்மா. ஐபேக் நிறுவனத்திலிருந்து இவர் வெளியேறி 5 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்த நிறுவனம் தான் Show time Consultancy சுருக்கமாக STC என்பார்கள். இந்த நிறுவனம் மூன்று மாநில தேர்தல்களில் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது.

குறிப்பாக ஆந்திர பிரதேசத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுகுதேசம் கட்சிக்கும், மஹாராஷ்டிராவில் ஷிண்டேயின் சிவசேனா கட்சிக்கும், மேகாலயா மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சிக்கும் பணியாற்றி ஹாட்ரிக் வெற்றியுடன் வந்தவர்கள் நீண்ட காலமாக திமுகவுடன் பேச்சு வார்த்தை நடத்தி வந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் வியூக வகுப்பாளராக ராபின் ஷர்மாவும் அவரது STC நிறுவனமும் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர சபரீசனின் பென் நிறுவனமும், சுனிலும் தனித்தனியாக வேலை செய்வதாகவும் தகவல்.

இதையும் படிங்க: ஓடி ஒளிகிறான் உதயசூரியன்.. பாஜகவின் அதிரடி வியூகம்.. 'ரத்த கண்ணீர்' ராதாவாகும் திமுக.. ஆட்டுவிக்கும் அதிமுக, தவெக,நாதக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share