தேர்தலுக்குப்பிறகு நிதிஷ்குமார் பாஜகவுக்கு மாபெரும் துரோகம் செய்வார்... பி.கே போட்ட அணுகுண்டு..!
இதை நான் எழுதி வைத்துத் தருகிறேன். இது நடக்காவிட்டால், எனது அரசியல் வாழ்க்கையை கைவிடுவேன்.
இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தலில் போட்டியிடும் என்று பாஜக ஏற்கனவே அறிவித்துள்ளது. தற்போது தேர்தல் வியூகவாதியாக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிரசாந்த் கிஷோர், ''பீகாரில் நிதீஷ் குமார், பாஜகவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார் என்றும், ஆனால் பின்னர் அவர் கட்சி மாறலாம். இருப்பினும், நிதிஷ் குமார் மிகவும் பிரபலம் அற்றவராகிவிட்டார். அவர் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலமைச்சராக முடியாது'' என்றும் அவர் கூறினார்.
மேற்கு சாம்பரானில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஜன் சூரஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர்,''நவம்பர் மாதம் தேர்தல்கள் முடிந்த பிறகு நிதிஷ் குமாரைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும் முதலமைச்சராகலாம். இதை நான் எழுதி வைத்துத் தருகிறேன். இது நடக்காவிட்டால், எனது அரசியல் வாழ்க்கையை கைவிடுவேன்.
இதையும் படிங்க: பீகாரில் போங்காட்டம்... முதல்வர் முகம் யார்..? பாஜக- நிதிஷ் குமார் இடையே சஸ்பென்ஸ்..!
நிதிஷ் குமார், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிடுவார். 2015 ஆம் ஆண்டு நான் அவரது பிரச்சாரத்தை வியூகம் வகுத்தபோது அவர் அதையே செய்துள்ளார். நிதிஷின் புகழ் வெகுவாகக் குறைந்துவிட்டதால், இந்த முறை அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதை பாஜக தவிர்த்து விடும்.தேர்தலுக்குப் பிறகு ஐந்து ஆண்டுகள் முழுவதும் நிதிஷ் குமார் முதல்வராக இருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் அறிவித்தால், பாஜக அதிக இடங்களை வெல்வது கடினமாகிவிடும்.
பிரசாந்த் கிஷோர் ஒரு காலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் தேசிய துணைத் தலைவராக இருந்தார். ஆனால் 2020-ல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் இது குறித்து பேசிட பி.ரசாந்த் கிஷோர், ''இந்தத் தேர்தலில் ஜேடியு மிகவும் மோசமாகச் செயல்படப் போகிறது. பாஜக தன்னை ஆதரிக்கப் போவதில்லை என்பதை நிதிஷ் குமார் புரிந்து கொள்ளும்போது, அவர் மீண்டும் தனது முடிவுகளை மாற்றலாம். ஆனால் ஐக்கிய ஜனதா தளம் மிகக் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றிபெறும். அவர் எந்த கூட்டணியில் சேர்ந்தாலும் முதலமைச்சர் பதவியைப் பெற முடியாது.
நிதிஷ் குமார் உடல் ரீதியாக சோர்வடைந்து, மன ரீதியாக ஓய்வு பெற்றுள்ளார். மறைந்த பாஜக தலைவர் சுஷில் மோடி கூட தான் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் தனது அமைச்சரவை அமைச்சர்களின் பெயர்களைக் கூட, ஆவணங்களைப் பார்க்காமல் சொல்ல முடியாது.
கடந்த ஆண்டு பிரதமர் மோடி புதிய அரசில் பதவியேற்றபோது, நிதிஷ் குமார் தனது பாதங்களை பகிரங்கமாகத் தொட்டு பீகாரை 'அவமானப்படுத்தினார்'. மோடி ஜி மீது அவருக்கு அவ்வளவு மரியாதை இருந்தால், அவரே தனிப்பட்ட முறையில் அவரது கால்களைத் தொட்டிருக்கலாம். ஆனால், அவர் அதிகாரத்தில் நீடிக்க முகஸ்துதி செய்கிறார்.
பீகாரில் நிலவும் மோசமான சூழ்நிலைக்கு ஜேடியு, ஆர்ஜேடி மட்டுமல்ல, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் தான் காரணம். பாஜக இரட்டைத் தரத்தை கடைப்பிடிக்கிறது. பாஜக மதுவிலக்கை மிகவும் விரும்பினால், உத்தரபிரதேசம் மற்றும் பாஜக ஆளும் பிற மாநிலங்களில் ஏன் அதை அமல்படுத்தக்கூடாது? அங்கு அவர்கள் வளர்ச்சி மற்றும் முதலீடு பற்றிப் பேசுகிறார்கள். பீகாரில் இலவச ரேஷன், மதுவிலக்கைத் தாண்டிச் சிந்திக்கவில்லை.
பல ஆண்டுகளாக, நிதிஷ் குமாருக்கும், லாலு பிரசாதுக்கும் இடையிலான அதிகாரப் போட்டியில் சிக்கித் தவிக்கும் இந்த 'அரசியல் புதைகுழியில்' இருந்து பீகாரை மீட்டெடுக்க எங்கள் ஜன் சூரஜ் கட்சி முழுமையாகத் தயாராக இருக்கிறது'' என பிரசாந்த் கிஷோர் கூறினார்.
இதையும் படிங்க: அமமுகவை பாஜகவுடன் இணைக்க அழுத்தம்... டி.டி.வி.தினகரனின் கெத்தான முடிவு..!