முகலாயர்கள் ‘அவுட்’... மகா கும்பமேளா ‘இன்’ - சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அதிரடி மாற்றம்!
சிபிஎஸ்இ ஏழாம் வகுப்பு புத்தகத்திலிந்து முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் குறித்த பாடங்களை மத்திய அரசின் கல்விவாரியமான என்சிஆர்டி முழுமையாக நீக்கி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசின் கீழ் செயல்படும் தன்னாட்சி அமைப்பான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான என்சிஆர்யின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. என்சிஆர்யின் கீழ் செயல்படும் ஆங்கில வழி பாட புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டது. அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஏழாம் வகுப்புக்கான சமூக அறிவியல் பாட புத்தகத்தை என்சிஆர்டி வெளியிட்டுள்ளது. எக்ஸ்பளோரிங் சொசைட்டி இந்தியா அண்ட் பியாண்ட் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அந்த பாட புத்தகத்தில் முகலாயர்கள் மற்றும் டெல்லியை ஆட்சி செய்த சுல்தான் குறித்த பாடப்பகுதி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்சிஆர்டி புதிதாக வெளியிட்டிருக்கும் பாட புத்தகங்களில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையின் அடிப்படையிலான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பால்வளத் துறை ஒதுக்கீடு! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது...
முகலாயர்கள் மற்றும் சுல்தான்கள் குறித்த பாடப்பகுதிகளை நீக்கிவிட்டு மகதா, மௌரியா போன்ற பண்டைய இந்திய சாம்ராஜ்யங்கள் குறித்த பாடப்பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. பூமி எப்படி புனிதமாகிறது என்ற பாடம் இணைக்கப்பட்டு அதில் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு மதங்களின் புனித தளங்கள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளன. புனித பூமி கும்பமேளா போன்ற தலைப்புகளிலும் பாடங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது முதல் பகுதி மட்டுமே என்றும் விரைவில் இரண்டாம் பகுதி பாடப்புத்தகம் வெளியாகும் என்று என்சிஆர்டி வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன
இதையும் படிங்க: உயிரை உலுக்கும் பயம்... POJK முகாம் பயங்கரவாதிகளை திரும்ப அழைக்கும் பாகிஸ்தான்..!