×
 

இலங்கை மட்டுமல்ல; இங்கிலாந்து கடற்படையுமா... இப்படி? ஆழ்கடலில் தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று சொன்ன காலம் போய், தமிழன் என்றால் இளிச்சவாயர்கள் என்று நினைக்கும் காலம் போல இது...

இதுவரை இலங்கை கடற்படை, போலீசார் மற்றும் மீனவர்கள் என்ற போர்வையில் வரும் 'சிங்கள காடையர்'கள், ஆழ்கடலில் மீன் பிடித்து வரும் தமிழக மீனவர்களை கொடுமைப்படுத்துவதும், பிடித்த மீன்களை, வலைகள் மற்றும் படகுகளுடன் பறித்துச் செல்வதுமீ வாடிக்கையான ஒரு நிகழ்வாக போய்விட்டது. 

துப்பாக்கிச் சூடு நடத்துவது, கைது செய்வது போன்ற அடாவடி செயல்களிலும் அவர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இந்த தாக்குதலில் உயிரிழந்த தமிழக மீனவர்கள் ஏராளம். தமிழக அரசை பொருத்தவரை காலம் காலமாக இது குறித்து டெல்லிக்கு கடிதங்களைத் தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக மீனவர்களின் கண்ணீருக்கு எப்போது விடை கிடைக்கும் என்று தெரியவில்லை. 

இடையில் நடந்த ஒரு ஆறுதலுக்கு உரிய விஷயம் என்னவென்றால், இலங்கை தமிழ் மண்ணில்  விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரன் 'மேதகு' பிரபாகரன் ஆட்சி நடந்த காலங்களில், தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது அறவே நின்று போய் இருந்தது நினைவு கூரத்தக்கது. 

இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் 10 பேர் கைது; தொடரும் இலங்கை கடற்படையின் அட்டூழியம்! 

இந்த சூழ்நிலையில், தற்போது இலங்கை கடற்படை மட்டுமல்ல இங்கிலாந்து கடற்படையினரும் தமிழக மீனவர்களை வேட்டையாடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. 

ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இங்கிலாந்து கடற் படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டு இருப்பது புதிய செய்தி. 

தூத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அந்த மீனவர்கள் மத்திய இந்திய பெருங்கடலில் டீகோ கார்சியா கீழ் வருதுமீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சர்வதேச கடல் எல்லையை தாண்டி விட்டதாக கூறி இங்கிலாந்து கடற் படையினர் கைது செய்து இருக்கிறார்கள்.

சூறை மீன் வேட்டைக்காக அவர்கள் ஆழ் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இங்கிலாந்து கடற் படையினர் அடாவடியாக அவர்களை மடக்கி பிடித்து கைது செய்து இருக்கிறார்கள். 

இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் மற்றும் மாவட்ட அரசு நிர்வாகத்தினருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இலங்கை சிறையிலிருந்து விடுதலை..புத்தாண்டில் தமிழகம் திரும்பிய தமிழக மீனவர்கள் ..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share