பிப்ரவரி 1 முதல் இயங்காது ! UPI பரிவர்த்தனைகள் குறித்து NPCI புதிய விதிமுறைகள் வெளியீடு
இந்திய தேசிய பேமெண்ட் கழகம்(என்பிசிஐ) புதிதாகக் கொண்டு வந்துள்ள மாற்றங்களின்படி பரிவர்த்தனைகளில் சிறப்புக் குறியீடு ஏதும் இருந்தால் பிப்ரவரி 1ம் தேதி முதல் யாருக்கும் பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுபிஐ செயலிகளை பதிவேற்றம் செய்யும்போது பரிவர்த்தனை ஐடிக்களை சிறப்பு கேரக்டர்களை(@,#,$) உருவாக்கும், இந்த சிறப்பு குறியீடுகள் இருந்தால் இனிமேல் பரிவர்த்தனை செய்ய இயலாது.
யுபிஐ ஐடி விதியை ஸ்திரப்படுத்தி, பரிவர்த்தனையை எளிமைப்படுத்தவும், பாதுகாப்பாகவாகவும் வைக்க இந்தத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேமெண்ட் நிறுவனங்களுக்கு கடந்த 9ம்தேதியே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி பேமெண்ட் நிறுவனங்கள் இனிமேல் “அல்பாநியமெரிக்” அதாவது ஆங்கில வார்த்தைகள், கணித எண்கள் மட்டுமே பரிவர்த்தனை ஐடியில் பயன்படுத்த வேண்டும். இதை அனைத்து பேமெண்ட் நிறுவனங்களும் மாற்றங்களை உறுதி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏன் யுபிஐ பரிவர்த்தனைகள் பாதிக்கும்
2025, பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளிலும் கண்டிப்பாக ஆங்கில எழுத்துக்கள் மற்றும் எண்கள் மட்டுமே இருக்க வேண்டும். எந்த யுபிஐ பேமெண்ட் செயலிகள் இன்னும் சிறப்பு குறியீடுகளை(அதாவது @, #, &, etc.) பயன்படுத்தினால், கன்ட்ரோல் சிஸ்டம் மூலம் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். பாதுகாப்பு மேம்படுத்துதல், தவறுகள் ஏற்படாவகையில் பாதுகாத்தலுக்காக இந்த முறை செயல்படுத்தப்படுகிறது. யுபிஐ அடிப்படையிலான பரிவர்த்தனைகளுக்கு அதிகபட்சமாக 35 எழுத்துக்கள் வரையரை கொடுக்கப்பட்டுள்ளது.
பயனீட்டாளர்கள் என்ன செய்வது
யுபிஐ செயலிகள் பிப்ரவரி 1ம் தேதிக்குப் பின்பும், பரிவர்த்தனைகளில் சிறப்புக் குறியீடு இருந்தால் பரிவர்த்தனை நிராகரிக்கப்படும். ஆதலால் யுபிஐ பயன்படுத்துவோர் அதை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் அப்டேட் செய்ய வேண்டும். பெரும்பாலான யுபிஐ நிறுவனங்கள் என்பிசிஐ தேவைக்கு ஏற்றார்போல் மாறிவிட்டன. சில ஆப்ஸ்களில் மட்டும் இந்த குறைபாடுகள் உள்ளன. அந்த செயலிகளை பயன்படுத்திவந்தால், தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
இதையும் படிங்க: டெல்லியில், கடும் குளிருக்கு வீடற்ற 474 பேர் பலி: அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறது, தேசிய மனித உரிமைகள் ஆணையம்
பேமெண்ட் தொடர்பான பிரச்சினைகளை எவ்வாறு தவிர்ப்பது
உங்களின் யுபிஐ செயலியில் பரிவர்த்தனை ஐடி ஃபார்மெட் எவ்வாறு இருக்கிறது என ஒருமுறை பார்க்க வேண்டும். அதில் சிறப்பு குறியீடுகள் இருந்தால், யுபிஐ சர்வீஸ் வழங்கும் நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.
இதையும் படிங்க: முதுகலை மருத்துவ படிப்பு இடஒதுக்கீடு... உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மறுசீராய்வு மனு....