×
 

உரிமையை பறி கொடுத்துவிட்டு புலம்புவது அண்டர் கண்ட்ரோல்... நக்கலடித்த சீமான்..!

உரிமையை பறி கொடுத்துவிட்டு புலம்புவது அவுட் ஆப் கண்ட்ரோல் இல்லை அண்டர் கண்ட்ரோல் என சீமான் விமர்சித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாடு டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் என முதலமைச்சர் பேசியது தொடர்பாக விமர்சித்தார். முக்கியமான பேரிடர் காலங்களில் நிதி எங்களுக்கு தரவேண்டிய நிதியை தரவில்லை., அதனால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியவில்லை., சில முக்கியமான திட்டங்கள் நிறைவேற்றப்பட முடியாம இருக்கிறது எனவே வரி கட்ட மாட்டோம் என கூறினால் அது அவுட் ஆஃப் கண்ட்ரோல்...வரியை கொடுத்துவிட்டு நெஞ்சில் வயிற்றில் அடித்துக் கொண்டால் அது அண்டர் கண்ட்ரோல் என விமர்சித்தார்.

கச்சத்தீவு மீட்பு குறித்து நீதிமன்றம் சென்றபோது, கொடுத்தது...கொடுத்தது தான் என்று கூறியபோது, இந்த நாட்டில் பாராளுமன்றம், சட்டமன்றம், பல்லாங்குழி ஆடுவதற்கா என்ற கேள்வியை தான் முன் வைத்ததாக கூறினார். இந்த ஆட்சியாளர்கள் எது ஒன்றையும் சட்டத்தின் பக்கம் திருப்பி விடுவார்கள் என பேசிய சீமான், அறநிலையத்துறையில் இஸ்லாமியற்களை உங்களால் சேர்க்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார் .

இதையும் படிங்க: தப்பு செஞ்சவங்கள தண்டிக்காம விவசாயிகளை வஞ்சிக்கிறது நியாயமா..? சீமான் ஆவேசம்..!

இதையும் படிங்க: தமிழகத்தில் மது, போதை ஒழிக்கப்பட வேண்டும்..! அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share