×
 

இது எப்படி இருக்கு..! ஏடிஎம்களில் பணம் எடுத்த மக்கள்.. கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய 3 வங்கிகள்..!

ஏடிஎம்களில் மக்கள் பணம் எடுத்ததால் 3 வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுத்ததன் மூலம் வங்கிகள் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டிய கதை கேட்டதுண்டா..?

பொதுவாக ஏடிஎம் மையங்களை பராமரிக்க முடியாமலும், பராமரிப்பு செலவு அதிகரிப்பதாலும் வங்கிகள் ஏடிஎம் கிளைகளை மூடுவதுண்டு. இதனால்தான் மே 1ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்கும் கட்டணத்தைக் கூட வங்கிகள் உயர்த்துகின்றன. ஆனால், வாடிக்கையாளர்கள், மக்கள் ஏடிஎம்களில் பணம் எடுத்ததால் 3வங்கிகள் மட்டும் லாபம் ஈட்டியுள்ளன. மற்ற வங்கிகள் நஷ்டத்தைச் சந்தித்துள்ளன.

இதையும் படிங்க: ஏடிஎம் யூசர்களுக்கு வந்த சோதனை... ஷாக் கொடுத்த ரிசர்வ் வங்கி!!

இந்த தகவலை மத்திய நிதித்துறை இணைஅமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அவர் கூறியதாவது:

கடந்த 5 ஆண்டுகளில் ஏடிஎம்களில் நடந்த பரிவர்த்தனை மூலம் எஸ்பிஐ வங்கி மட்டும் ரூ.2043 கோடி லாபம் ஈட்டியுள்ளது.ஆனால் 9 பொதுத்துறை வங்கிகள் சேர்ந்து ரூ.3,738 கோடி நஷ்டமடைந்துள்ளன. எஸ்பிஐ வங்கி தவிர்த்து கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை ஏடிஎம் பரிவர்த்தனையால் லாபம் அடைந்துள்ளன. பஞ்சாப் நேஷனல் வங்கி கடந்த 5 ஆண்டுகளி்ல ஏடிஎம் பரிவர்த்தனை மூலம் ரூ.90 கோடியும், கனரா வங்கி ரூ.31 கோடியும் லாபமீட்டுயுள்ளன.

வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் எஸ்பிஐ ஏடிஎம்களை பயன்படுத்தி குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் அவர்களிடம் கராராக கட்டணத்தை எஸ்பிஐ வங்கி வசூலித்து இந்த லாபத்தை ஈட்டியுள்ளது. எஸ்பிஐ வங்கி 2019-20ம் ஆண்டில் ரூ.656 கோடியும், 2020-21ம் ஆண்டில் ரூ.228 கோடியும், 2021-22ம் ஆண்டில் ரூ.393 கோடியும், 2022-23ம் ஆண்டில் ரூ.435 கோடியும், ரூ.2023-24ம் ஆண்டில் 331 கோடியும் லாபமீட்டியுள்ளது.

வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏடிஎம் களில் இருந்து மாதத்துக்கு 5 பரிவர்த்தனைகளை மெட்ரோ நகரங்கள் இல்லாத நகரங்களில் கட்டணமின்றி எடுக்கலாம். ஆனால் மெட்ரோ நகரங்களில் 3 பரிவர்த்தனைகள் மட்டுமே செய்ய முடியும்.  அதன்பின் கட்டணம் வசூலிக்கப்படும், அதிலும் மே1 ம்தேதிக்குப்பின் ஏடிஎம்களில் பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணமாக ரூ.2 வசூலிக்கப்படுகிறது. தற்போது 6வது பரிவர்த்தனைக்கு ரூ.21 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்தார்.

இதையும் படிங்க: வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஸ்ட்ரைக்..! கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடிய நகரம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share