×
 

இப்படியா தேர்தல் வாக்குறுதியை மறப்பீங்க..? திமுகவை வசைப்பாடிய ஓ.பி.எஸ்..!

பகுதிநேர ஆசிரியர்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பாணையை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணியாற்றி வரும் ஓவிய ஆசிரியர்கள், இசை ஆசிரியர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் ஆகியோரை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற பேரவை பொது தேர்தலில் முன்னிட்டு திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டதாக ஓ பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.

இதே வாக்குறுதியை 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போதும் திமுக அறிவித்தது ஆனால் ஆட்சி பொறுப்பேற்று நான்கு நான்கு ஆண்டுகளைக் கடக்க உள்ள நிலையிலும் இதுவரை திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார்.

சொத்துவரி, குடிநீர் வரி, மின்கட்டண வரி, வாகன வரி, முத்திரைத்தாள் கட்டணம் என மாநில அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட அனைத்து வரிகளையும் உயர்த்தி ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் பொதுமக்களிடமிருந்து வருமானமாக பெற்ற நிலையிலும், தேர்தல் வாக்குறுதியான பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் என்பதை திமுக அரசு நிறைவேற்ற மறுப்பதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம்.. பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து..!

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 13 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருவதாகவும் இவர்களுக்கு 12,500 மாத தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படுவதாகவும் இந்த சொற்ப ஊதியத்தை வைத்து குடும்பத்தை நடத்த முடியாமல் அனைவரும் அவதிப்பட்டு வருவதாகவும் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பணி நிரந்தரம் கோரி பலகட்ட போராட்டங்களில் பகுதிநேர ஆசிரியர்கள் ஈடுபட்ட போதிலும், உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்ட போதும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என்று அரசு உத்தரவாதம் அளித்த நிலையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் இது குறித்து அறிவிப்பு வெளிவரும் என பகுதிநேர ஆசிரியர்கள் ஆவலுடன் காத்திருந்ததாக குறிப்பிட்டார்.

ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சிய நிலையில், தங்களுக்கான பணி நிரந்தர அறிவிப்பானை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110இன் கீழ் வெளியிட வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பதாகவும், தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தமிழ்நாடு சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் இதற்கான அறிவிப்பாணையை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இருந்து விலகிக் கொள்வதுதான் எடப்பாடியாருக்கு மரியாதை… சாது மிரண்ட ஓ.பி.எஸ்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share