OTTகளுக்கு கடும் எச்சரிக்கை..! தடை செய்யப்பட்டதை ஒளிபரப்பக் கூடாது என மத்திய அரசு வலியுறுத்தல்..!
சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை ஒளிபரப்பவோ, பரப்பவோ கூடாது என்று ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமீபத்தில் யூடியூப்பர் ரன்வீர் அலாபாடியா யூடியூப்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு பல இடங்களில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அஸாம், மகாராஷ்டிராவில் கைது செய்யவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தை அலாபாடியா அனுகிய நிலையில் அவரை கடுமையாக எச்சரித்த பின், கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடைவிதித்தது.இந்த சம்பவத்துக்குப்பின், ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு புதிய எச்சரிக்கையை இன்று விடுத்துள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைசச்கம் வெளியிட்ட அறிவிப்பில் “ ஓடிடி தளங்கள், மற்றும் சுய ஒழுங்கு அமைப்புகள் கண்டிப்பாக, 2021 தகவல் தொழில்நுட்ப ஒழுக்கவிதிகளை கடைபிடிக்க வேண்டும். ஒரு கருத்தை வெளியிடும் முன்பு, ஒளிபரப்பும் முன், பிரசுரிக்கும் முன், வயது அடிப்படையிலான பிரிவு கட்டுப்பாட்டை உணர்ந்து செயல்பட வேண்டும். அவ்வாறு ஐடி விதிகளின் ஒழுக்க விதிகளை மீறி செயல்படும் ஓடிடி தளங்களுக்கு எதிராக அதன் சுய கட்டுப்பாடு அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: அஞ்சு கட்சி அமாவாசை, பத்து ரூபாய் தியாகி... அமைச்சர் செந்தில் பாலாஜியை டேமேஜ் ஆக்கிய மாஜி அமைச்சர்.!
ஓடிடி தளங்களுக்கு எதிராக நாடாளுமன்ற எம்.பிக்கள், அரசு நிறுவனங்கள், அமைப்புகள் மக்களிடம் இருந்து புகார்கள் வந்தன. குறிப்பாக முகம் சுளிக்கும் காட்சிகள், பாலியல்காட்சிகள், அருவருப்பான பாலியல் காட்சிகளை ஓடிடி தளங்கள் வெளியிடுகின்றன, சமூக வலைத்தளத்திலும் வெளியிடுகின்றன எனப் புகார்கள் வந்தன. ஆதலால், ஓடிடி தளங்கள் ஒரு கருத்தை, படத்தை பிரசுரிக்கும், வெளியிடும் முன் அது எந்த வயதினருக்கு ஏற்றது என்பதை உணர்ந்து, ஐடி சட்டம் 2021 ன் கீழ் ஒழுக்க விதிகளை கடைபிடித்து காட்சிகளை பிரசுரிக்க வேண்டும். இல்லாவிட்டால், ஒடிடி தளங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும்.
ஓடிடி தளங்கள் சட்டத்தால் தடை செய்யப்பட்ட, பிரசுரிக்கக்கூடாத, பார்க்க தடை செய்யப்பட்ட காட்சிகளை பிரசுரிக்கவோ, வெளியிடவோகூடாது. வயது அடிப்படையில் எந்த வயதினர் பார்க்கக்கூடியது என்பதை அறிந்து, விதிகளுக்கு உட்பட்டு வெளியிட வேண்டும். குறிப்பாக ஏ சான்று பெற்ற காட்சிகளை குழந்தைகள் பார்க்கும் வகையில் குறிப்பிட்ட நேரத்தில் ஒளிபரக்கூடாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை, அறிவுரைகளை வழங்க வேண்டும் மத்திய அரசு என ரன்வீர் அலாபாடியா வழக்கில் நேற்றுமுன்தினம் உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து மத்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர், வீட்டுப் பேரன், பேத்திகள் 3 மொழி படிப்பாங்க..!! ஏழை பிள்ளைகள் படிக்கக் கூடாதா.? தெறிக்க விட்ட அண்ணாமலை.!