கதை முடிந்தது..! 45 நாட்களில் 325க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர்- சத்தீஸ்கர் முதல்வர்
மாநில, மத்திய மட்டங்களில் 'இரட்டை இயந்திரம்' கொண்ட பாஜக அரசால் ஆதரிக்கப்படும் தீவிரப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை பிரதிபலிக்கின்றன.
பாதுகாப்புப் படையினரால் 325க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் ஒழித்துக்கட்டி விடப்பட்டதாகவும், இன்னும் ஒன்றரை மாதங்களில் 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்படுவதையோ, சரணடைவதையோ உறுதி செய்துள்ளதாகவும் சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தெரிவித்துள்ளார்.
இது நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் அவர்களுக்கு எதிரான ஒரு மாநிலத்தின் போராட்டத்தில் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பெங்களூருவில் நடந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், '' நகசலைட்டுகளின் அச்சுறுத்தல்கள் பஸ்தர் பகுதியில் மட்டுமே உள்ளது. ஆகையால் நக்சைட்டுகள் நடமாட்டம் மாநிலம் முழுவதும் உள்ளது என்கிற கருத்தை ஏற்க முடியாது. எங்கள் அரசு பதவியேற்று ஓராண்டே ஆகின்ற நிலையில், நாங்கள் துணிச்சலுடன் பாதுகாப்புப் படையிஅருடன் இணைந்து நடவடிக்கைகள் எடுத்து , குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். 45 நாட்களில், 325க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகளை நாங்கள் ஒழித்துள்ளோம். 2,000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் சரணடைய உள்ளனர்.
இதையும் படிங்க: இந்தியாவில் ரயில் கடத்தல் நடந்துள்ளதா..? எங்கு நடந்தது தெரியுமா..?
நக்சலைட்டுகளின் அச்சுறுத்தல்கள் விரைவில் முழுமையாக ஒழிக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம். சரணடைபவர்களை ஊக்குவிக்க ஒரு வலுவான மறுவாழ்வு திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம். நக்சல் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் 38 பாதுகாப்பு முகாம்களை நிறுவி, 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சேவைகளை வழங்கும் 'நியாத் நெல்லனார்' (உங்கள் அழகான கிராமம்) திட்டம் நகசலைட்டுகளை சரணடைய வைக்கும் வெற்றிக்குக் காரணமாக அமைந்தன'' என்று அவர் பாராட்டினார்.
சத்தீஸ்கரின் மீதமுள்ள பகுதிகள் நக்சல் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டுள்ளன. இது முதலீட்டாளர்களுக்கு ஒரு இங்கு முதலீடு செய்ய நம்பிக்கை அளிக்கிறது'' என்பதை சாய் அடிக்கோடிட்டுக் காட்டினார். மார்ச் 31, 2026க்குள் நாடு தழுவிய அளவில் நக்சலிசத்தை ஒழிக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உறுதிமொழியுடன் சேர்ந்து சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தனது அரசின் முயற்சிகளையும் இணைத்தார்.
மாநில அரசு, மத்திய அரசு என 'இரட்டை இயந்திரம்' கொண்ட பாஜக அரசால் மேற்கொள்ளப்பட்ட நக்சல் ஒழிப்பு நடவடிக்கைகள் அவர்களை அடியோடு ஒழிக்கும் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன. நக்சலைட்டுகள் ஒழிப்பு சத்தீஸ்கரை அமைதி, வளர்ச்சி பாதையை நோக்கி கொண்டு செல்கின்றன.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணிக்கு நிச்சயம் முடிஞ்சிடுச்சு.. கல்யாணம் எப்போன்னு தெரியல.. செமயாக கலாய்த்த திமுக கூட்டணி கட்சி!!