×
 

பாகிஸ்தானியர்களுக்கு வைத்த பொறியில் திடீர் திருப்பம்; கொத்தாக சிக்கிய 500 வங்கதேசத்தவர்கள்..!

குஜராத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 550க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானியர்கள் அனைவரையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து அந்தந்த மாநில காவல்துறையினர் தொழில், மருத்துவம், கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுத்து, வெளியேற்றி வருகிறது. 

இதற்காக தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில்
போலி ஆவணங்களுடன் இந்தியாவில் வசிக்கும் 550க்கும் மேற்பட்ட வங்கதேசத்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூரத் அருகே சந்தலா பகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக உளவுத்துறை சார்பில் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நான் என்ன அவ்வளவு இலக்காரமா? விசிகவை வெளியேற்ற சதி.. ஆத்திரத்தில் கொந்தளித்த திருமா..!

இதனையடுத்து சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG), குற்றப்பிரிவு, மனித கடத்தல் எதிர்ப்புப் பிரிவு (AHTU), குற்றப்பிரிவு தடுப்பு (PCB) மற்றும் உள்ளூர் காவல் துறை உள்ளிட்ட பல சட்ட அமலாக்கப் பிரிவுகள் இணைந்து சோதனையில் ஈடுபட்டன. அகமதாபாத் மற்றும் சூரத்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான சோதனையில் இந்தியாவில் போலி ஆவணங்களுடன் வசித்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 550க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள்  கைது செய்யப்பட்டனர். 

இவர்களிடம் விசாரணை நிறைவடைந்ததும் நாடு கடத்தல் நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
 

இதையும் படிங்க: டெல்லியில் ட்ரிபிள் இஞ்சின் ஆட்சி... டெல்லி மேயர் பதவியையும் தட்டித்தூக்கிய பாஜக..! ஆம் ஆத்மி வாஷ் அவுட்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share