பஹல்காம் தாக்குதல்: கைகளைப் பற்றி கதறி அழுத உறவுகள்.. அமித் ஷா சொன்ன ஒற்றை வார்த்தை...!
காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டில் பலியானோரின் குடும்பத்தினருக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆறுதல் தெருவித்தார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நேற்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்றவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு முன்பாக அவர்களின் மதம் குறித்து கேட்டு பின்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். குஜராத், கர்நாடகா உள்பட பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் நிலையில், இச்சம்பவத்திற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. துப்பாக்கச்சூட்டில் பாதிக்கப்பட்டவருடைய குடும்பங்களை நேரில் சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆறுதல் கூறினார். ஸ்ரீநகரில் மருத்துவமனையில் உள்ள பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்து நேரடியாக ஆறுதல் கூறினார் .
இதையும் படிங்க: அமித் ஷாவுக்கு அதுதான் பொழப்பே... நயினார் நாகேந்திரனுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி...!
அதுமட்டுமல்லாமல் இந்த துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுடைய குடும்பத்தினரையும் சந்தித்து தற்பொழுது ஆறுதல் கூறினார். உறவுகளை இழந்து கண்ணீர் மல்க அமித் ஷாவின் கைகளைப் பற்றி அழுத குடும்பத்தினரிடம், இந்த துப்பாக்கி சூட்டில் காரணமான அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதிபட தெரிவித்தார்.
முதற்கட்டமாக பயங்கரவாதிகள் தாக்குதலில் பலியானவர்களுடைய உடல்களுக்கு அஞ்சலி செலுத்திய அமித் ஷா, அதனைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அதற்கு அடுத்தபடியாக மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயம் அடைந்தவர்களுடைய குடும்பத்தினரையும் நேரில் சந்தித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவார்.. பாஜக ஆட்சியும் வரும்.. ஒரு முடிவில் இருக்கும் நயினார்.!!