பஹல்காம் தீவிரவாத தாக்குதல்.. சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்..!
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்கவும், தீர்மானம் கொண்டுவரவும் சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைக் கூட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு சார்பில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் அனைத்துக் கட்சி தலைவர்களும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி தாக்குதலுக்கு எதிராக் தீர்மானம் நிறைவேற்ற மத்திய அரசைக் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞரான கபில் சிபலும், மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக்கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இதன் மூலம் மோடி அரசு அனைத்துக் கட்சியினருடனும் நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தி, தீவிரவாதத்துக்கு எதிரான போரில் அரசுக்கு துணையாக இருப்பதாக அனைத்துக் கட்சியினரும் இருப்பதாக தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜனாதிபதி பெயரளவு தலைவர் தான்..! ஜெகதீப் தன்கருக்கு கபில் சிபல் கண்டனம்..!
இந்நிலையில் பாஜக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில் “நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. பிரதமர் மோடி எப்போதுமே, தேசத்தின் ஒற்றுமை, குறிப்பாக தேசத்தின் பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கல் எழும்போது தேச ஒற்றுமை, ஒருமைப்பாட்டை எதிர்பார்பார்.
ஆதலால், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை, சிறப்புக்கூட்டத்தின் தேவையைக் கருதி, அவசரம் கருதி, விரைவில் சிறப்புக் கூட்டத்துக்கான தேதியை அறிவிக்கும், இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பார். குறுகிய கால நோட்டீஸுடன் சிறப்புக்கூட்டத்தொடர் தொடங்கி முடியும்” எனத் தெரிவித்தார். 1962ம் ஆண்டு இந்தியா-சீனா போரின் போது அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில் “ பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் மத்திய அரசு தீவிரவாதத்துக்கு எதிராகவும், அதற்கு உறுதுணையாக இருக்கும் நாட்டுக்கு எதிராக எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாகிஸ்தான் மீது நிச்சயமாக தாக்குதல் இருக்கும், தீவிரவாதிகள் புகலிடங்கள் நோக்கி தாக்குதல் இருக்கும்.
குடியரசுத் தலைவர் ரோம் நகரிலிருந்து திரும்பியதும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்துக்கான கூட்டம் குறித்து முடிவு செய்யப்படும். ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளுக்கும், தேசத்தின் நலனிலும் எப்போதுமே பிரதமர் மோடி ஆதரவாக இருப்பார். விரைவில் சிறப்புக்கூட்டத்தொடருக்கான தேதி வெளியாகும்” எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பஹல்காம் தாக்குதல்; பாதுகாப்பு படை வீரர்கள் எங்கே போனார்கள்? விளக்குகிறது மத்திய அரசு!!