சிந்து நீரை நிறுத்துவது போருக்கு சமமான நடவடிக்கை.. இந்தியாவை விமர்சித்த பாகிஸ்தான்!!
சிந்து நீரை இந்தியா நிறுத்தியது போருக்கு சமமான நடவடிக்கை என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது.
பஹல்காமில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதன் மூலமும், பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா தள்ளுபடி திட்டத்தை (எஸ்.வி.இ.எஸ்) ரத்து செய்வதன் மூலமும் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய அரசு பதிலளிக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் முப்படைகளின் தளபதிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்ககு எதிராக அதிரடியான முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி, பாகிஸ்தானுடனனா சிந்து நதி நீர் ஒப்பந்தம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. பாகிஸ்தானியர்கள், இந்தியாவை விட்டு 48 மணிநேரத்தில் வெளியேற கெடு விதிக்கப்பட்டது, வாகா, அட்டாரி எல்லைகள் மூடப்பட்டன, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒரு வாரத்தில் நாட்டை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டது, பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. மேலும் சிந்து நதியில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் திறந்துவிடப்படுவது இன்று நிறுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அமித் ஷா கையில் ரெட் ஃபைல்... அமெரிக்கா, சீனாவுக்கு அழைப்பு... பாகிஸ்தான் சம்பவம் லோடிங்..!
இந்த நிலையில் சிந்து நீரை இந்தியா நிறுத்தியது போருக்கு சமமான நடவடிக்கை என்று பாகிஸ்தான் விமர்சித்துள்ளது. சிந்து நதிநீர் தொடர்பாக பாகிஸ்தான் விடுத்துள்ள அறிக்கையில், சிந்து நதி நீரை நிறுத்தும் இந்தியாவின் நடவடிக்கையை பாகிஸ்தான் வன்மையாக கண்டிக்கிறது. நீரை பங்கிடுவது உலக வங்கியின் முன்னிலையில் செய்யப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும். இப்படி இருக்கும்போது இதை ஒருதலைப்பட்சமாக நிறுத்த எந்த உரிமையும் கிடையாது. நீர் என்பது பாகிஸ்தானுக்கு ஒரு முக்கிய தேசிய நலன். 240 மில்லியன் மக்களுக்கு இதுவே வாழ்வாதாரம்.
எனவே இந்த நீர் கிடைக்கும் உரிமையை எந்த விலை கொடுத்தாவது காப்பாற்றுவோம். எங்களுக்கு உரிய நீரை தடுத்து நிறுத்துவதும், அதை மடை மாற்றம் செய்வதும் போருக்கும் இணையான நடவடிக்கையாக நாங்கள் பார்க்கிறோம். எனவே இதற்கான முழு ராணுவ எதிர்வினையை எதிர்பார்க்கலாம். சர்வதேச ஒப்பந்தங்கள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் மற்றும் உலக சட்டங்களை இந்தியா மீறுகிறது.
இந்தியாவின் இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கு இடையேயான சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்றிருக்கிறது. இந்தியாவின் இப்படியான மோசமான எண்ணங்கள் மற்றும் சட்ட மீறல்களும் தொடரும் வரை இரு தரப்பில் போட்டப்பட்ட எந்த ஒப்பந்தங்களையும் பாகிஸ்தான் பின்பற்றாது என்று தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பாகிஸ்தான் ஆலோசனைக் கூட்டம் நிறைவு... வெளியான பல முக்கிய அறிவிப்புகள்!!