×
 

படிக்கச் சொன்ன அப்பா.. ஷாப்பிங் மாலில் +2 மாணவன் தற்கொலை.. பஞ்சாப்பில் அதிர்ச்சி சம்பவம்..!

பஞ்சாபில் தந்தை படிக்க சொன்னதால் ஷாப்பிங் மாலின் நான்காவது தளத்தில் இருந்து பிளஸ் டூ மாணவன் தற்கொலை செய்து கொண்டு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அபிஜித் என்ற மாணவர் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது தந்தை படிப்பில் கவனம் செலுத்துமாறும் செல்போனில் செலவழிக்கும் நேரத்தை குறைக்குமாறும் கூறியதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பஞ்சாப் மாநிலம் மொகாலியில் உள்ள பிரபல ஷாப்பிங் மால் ஒன்றே நான்காவது மாடியில் இருந்து அபிஜித் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாடியில் இருந்து ஒருவர் குதித்து விட்டதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மாணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். 

 இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் இறந்தவர் 17 வயதான அபிஜித் என்பது தெரியவந்துள்ளது. இது குறித்து அபிஜித்தின் தந்தை மன்மோகன் சிங்குக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அபிஜித் மரணம் தொடர்பாக அவரது தந்தை, தனது மகன் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்

இதையும் படிங்க: மோமோஸ் சாப்பிட போறீங்களா உஷார்!! கிலோ கணக்கில் கெட்டுப்போன மாமிசம்.. பிரிட்ஜுக்குள் நாயின் தலை!!

இந்த சம்பவம் நிகழ்ந்த அன்று படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் செல்போன் நேரத்தை பார்க்கும் நேரத்தை குறைக்குமாறு தனது மகனுக்கு அறிவுரை கூறிய நிலையில் இருவருக்கும் இடையே சிறு வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் மனமடைந்த அபிஜித் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், பிரபல ஷாப்பிங் மால் இன் நான்காவது தளத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: சிவசேனா தலைவர் கொலை.. 'என்கவுண்டரை' தொடர்ந்து 3 பேர் கைது.. மர்மம் நீடிப்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share