தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய மகன்..! ஏழுமலையான் கோவிலில் பவன் கல்யாண் மனைவி முடிக் காணிக்கை..!
தனது மகன் பள்ளி தீவிபத்தில் இருந்து உயிர் தப்பியதால் பவன் கல்யாண் மனைவி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடிக்காணிக்கை செலுத்தினார்.
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா தலைவருமான பவன் கல்யாணின் மகன் பள்ளி தீவிபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினார். இதனையடுத்து பவன் கல்யாண் மனைவி அன்ன லெஸ்னேவா திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் முடிக் காணிக்கை செலுத்தினார்.
சிங்கப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பவன் கல்யாண் மகன் மார்க் சங்கர் படித்து வருகிறார். இந்த நிலையில் பள்ளியில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் மார்க் சங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் பவன் கல்யாண் உடனடியாக சிங்கப்பூர் சென்று தனது மகனை இந்தியாவுக்கு அழைத்து வந்தார்.
மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் மார்க் சங்கருக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் குணமடைந்து உள்ளார்.இதையடுத்து, தனது மகன் உயிர்த் தப்பி நல்லபடியாக குணமானதால் ஒரு புனித யாத்திரை செல்ல திட்டமிட்டார்.
இதையும் படிங்க: தீ விபத்தில் சிக்கிய மகன் எப்படி இருக்கிறான்? மகனின் உடல்நிலை குறித்து உருக்கம்..!
அதன்படி, திருப்பதி பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு மேற்கொண்டனர். அப்போது பவன் கல்யாண் மனைவி அன்ன லெஸ்னேவா முடிக்காணிக்கை செலுத்தி வழிபட்டார்.
முன்னதாக அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றதுடன் அவர் கிறிஸ்தவர் என்பதால் அதற்கான விசேஷ படிவத்தில் கையெழுத்து பெற்றனர். பின்னர் அன்னா லெஜினோவா, கோவிலில் தலைமுடி காணிக்கை செலுத்தினார். அதன் பிறகு வி.ஐ.பி. தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்கிறார்.
இதையும் படிங்க: அந்த நடிகரெல்லாம் துணை முதல்வரா..? நினைக்கவே சங்கடம்.. பிரகாஷ் ராஜ் கடும் கோபம்..!