கனிமவளம் ஏற்றிக்கொண்டு அதிவேகமாகச் சென்ற லாரி.. இரண்டாவது நாளாக பொதுமக்கள் போராட்டம்..
பொள்ளாச்சி அருகே போலி ஆவணங்களோடு கனிம வளங்களை ஏற்றி அதிவேகமாக வந்த இரண்டு லாரிகளை பொதுமக்கள் இரண்டாவது நாளாக சிறைபிடித்தனர்.
தமிழக கேரளா எல்லை பகுதியான பொள்ளாச்சி வழியாக கனிமவளங்கள் அதிக பாரம் ஏற்றிக் கொண்ட கனரக வாகனங்கள் செல்கின்றன. இந்லையில் நேற்று வேட்டைக்காரன் புதூர் அருகே அதிக பாரம் ஏற்றி வந்த கனிம வள லாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்தனர். இதனை தொடர்ந்து ஆனைமலை காவல் நிலைய அதிகாரிகள் சிறைபிடிக்கப்பட்ட லாரிகளை காவல்நிலயத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்நிலையில் மீண்டும் அதே பகுதியில் இரண்டாவது நாளாக இன்றும் அதிவேகமாக அதிக பாரம் ஏற்றி வந்த 2 கனிம வள லாரிகளை அப்பகுதி மக்கள் சிறை பிடித்துள்ளனர்.போக்குவரத்து நெரிசல் நிறைந்த வேட்டைக்காரன் புதூரில் அதிவேகமாக இரண்டு லாரிகள் கனிம வளங்களை ஏற்றி வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பகுதி மக்கள், வாகனத்தை இயக்கி வந்த நபரிடம் உள்ள ஆவணங்களை சரி பார்த்தபோது,ஆவணங்கள் போலியாக இருந்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் விரைவில் போராட்டம்.. வேல்முருகன் அறிவிப்பு..!
இதனை அடுத்து பொதுமக்கள் கனிம வள லாரிகளை இயக்கி வந்த ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பொதுமக்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து இரண்டாவது நாளாக அப்பகுதியில் அதிக பாரத்தோடு கனிம வளங்களை ஏற்றி வரும் லாரிகள் பிடிபட்டது அதிகாரிகளின் மெத்தனப் போக்கை காட்டுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கிறுக்கு வேலைகளில் ஈடுபடும் முதலமைச்சர் நிதிஷ்..! மண்டையைப் பிய்த்துக் கொள்ளும் அதிகாரிகள்..!