அடுத்த பிரதமர் வேட்பாளர் ‘யோகி ஆதித்யநாத்’.. அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேச்சு..!
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அடுத்த பிரதமர் வேட்பாளராக்க திட்டம் இருக்கிறது என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அடுத்த பிரதமர் வேட்பாளராக்க திட்டம் இருக்கிறது, இதற்கான திட்டம் சமீபத்தில் முடிந்த கும்பமேளாவில் உருவாக்கப்பட்டது என்று சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் லக்னெளவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் சமீபத்தில் நடந்து முடிந்த கும்பமேளா, அரசியல் கும்பமேளாவாக மாற்றப்பட்டது, இது மதம்சார்ந்த நிகழ்ச்சியல்ல. பக்தர்களுக்கான கும்பமேளா அல்ல,அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: உ.பி.யில் எத்தனை தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்..? யோகியிடம் ஆதாரம் கேட்கும் கார்த்தி சிதம்பரம்..!
இந்த கும்பமேளாவில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது, அதாவது அடுத்த பிரதமர் வேட்பாளராக உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொண்டுவர திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த கும்பமேளாவில் ஏராளமான கோடிப்பணம் முறைகேடு செய்யப்பட்டு,தவறாக நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது. கும்பமேளாவின்போது ஏதேனும் டிசேனல் நேர்காணல் வழங்கியுள்ளதா, அப்படி ஏதாவது இங்கு நடந்ததா. ஒட்டுமொத்தமாக நிர்வாகக் குளறுபடி நடந்துள்ளது.
எதிர்காலத்தில் இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். பல விஷயங்கள் என் பார்வைக்கு வரவில்லை, இங்கு இருக்கும்போது ஏராளமான உண்மைகள் தெரியவரும்” எனத் தெரிவித்தார். இந்தியா கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு அகிலேஷ் யாதவ் பதில் அளிக்கையில் “2027 உ.பி. சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்தியா கூட்டணி தொடரும். இப்போது இருக்கும் நிலையிலேயே கூட்டணி தொடரும்.
வக்ஃபு திருத்தச் சட்டத்தைக் கொண்டு நில மாபியா போன்று மத்திய அரசு செயல்பட முயல்கிறது. எங்கெல்லாம் நிலத்தைப் பார்க்கிறதோ அதை அபகரித்துக்கொள்ள பாஜக முயல்கிறது. 2027 சட்டப்பேரவைத் தேர்தலுக்குள் உ.பி.யில் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் சிறுபான்மையினரை வேரோடு அகற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி மூலம் மக்களின் பணத்தை பாஜக கொள்ளையடித்தது, பறித்துக்கொண்டது, இடஒதுக்கீடு உரிமைகளைக் குறைத்தது.
உ.பியில் மீண்டும் சமாஜ்வாதிக் கட்சி ஆட்சிக்கு வந்தால், மகா கும்பமேளாவில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உறுதியளிக்கிறேன். கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் குறித்து இதுவரை தெளிவான எண்ணிக்கையை அரசு வெளியிடவில்லை, எவ்வளவு நிதிலாபம் கிடைத்தது என்பதும் தெரியவில்லை. கூட்டநெரிசல் ஏற்பட்டபோது கண்காணிப்பு கேமரா, ட்ரோன்கள் ஏன் செயல்படவில்லை.
ட்ரோன்கள், கண்காணிப்பு கேமிராக்கள் முக்கியமாக வைக்கப்பட்டிருந்தநிலையில், அந்த நேரத்தில் மட்டும் ஏன் செயல்படவில்லை. கூட்டநெரிசலில் பலியானவர்களின் உறவினர்களை அழைத்து, உயிரிழப்புக்கான காரணத்தை திரித்துக்கூற வேண்டும் என உபி. அரசு வற்புறத்தியுள்ளது.
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியலில் நீடிக்க விரும்பவில்லை..! நான் ஒரு யோகி.. ஆதித்யநாத் அதிர்ச்சி பேட்டி..!