அட்ராசக்க..! பிரதமரின் எக்ஸ் பக்கத்தை கையாளும் தமிழக செஸ் வீராங்கனை..!
சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி இன்று ஒரு நாள் மட்டும் பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கங்களை செஸ் வீராங்கனை வைஷாலி கையாளுகிறார்.
இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. மனதைரியம், விடாமுயற்சி, பாசம், அரவணைப்பு என பல விஷயங்களில் குடும்பத்திற்காகவும், நாட்டுக்காகவும் செய்து வரும் பெண்களை போற்றும் வகையில், மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினத்தை ஒட்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பெண்மையை போற்றும் வகையில் முக்கிய நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகின்றனர். மகளிர் தினத்தை ஒட்டி பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எல்லாமே பெண்கள் தான்..! பிரதமர் நிகழ்ச்சியில் ட்விஸ்ட் வைத்த குஜராத் போலீஸ்..!
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண் சக்திக்கு தலை வணங்குவோம் என குறிப்பிட்டுள்ளார். நமது அரசு எப்போதும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பாடுபட்டுள்ளது என்றும் தனது சமூக வலைதள கணக்குகளை பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த பெண்கள் கையாளுவாளர்கள் எனவும் கூறியுள்ளார்.
இன்று மகளிர் தினத்தை ஒட்டி, தமிழக சுஷ்வீராகனை வைஷாலி தனது சமூக வலைதள பக்கங்களை கையாளுகிறார் என குறிப்பிட்டுள்ளார்.
பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி தான் வைஷாலி,. இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்ற இவர், கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார். இந்திய அளவில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற 3-வது பெண் வீராங்கனை வைஷாலி ஆவார்.
இதையும் படிங்க: எம்.பி.யாகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்..! மோடிக்கு இனி தலைவலி தான்..!