×
 

பிரதமர் மோடி ‘ரொம்ப ஸ்மார்ட்’..! பரஸ்பர வரி சிறப்பாக செயல்படும்: அதிபர் ட்ரம்ப் புகழாரம்..!

பிரதமர் நரேந்திர மோடி மிகவும் ஸ்மார்ட்டான மனிதர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தகம் தொடர்பான ஆலோசனைகள் திருப்திகரமாக செல்கின்றன, பரஸ்பர வரித்திட்டம் சிறப்பாக இருக்கும், பிரதமர் மோடி மிகவும் ஸ்மார்ட்டான மனிதர் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

வாஷிங்டனின் வெள்ளை மாளிகையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இதையும் படிங்க: அமலாக்கத் துறைக்கு க்ளீன் ஷீட் கொடுத்த பிரதமர் ! 22 ஆயிரம் கோடி பணத்தை மீட்டு பெருமிதம்

சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி அமெரிக்கா வந்திருந்தார். நாங்கள் எப்போதும் இந்தியாவுடனும், பிரதமர் மோடியுடனும் நல்ல நட்புறவு வைத்துள்ளோம். உலகளவில் அதிகமான வரிவிதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும் இந்தியா  மிகவும் ஸ்மார்ட்.

அதிலும் பிரதமர் மோடி மிகவும் ஸ்மார்ட்டான மனிதர், எனக்கு மிகச்சிறந்த நண்பர். எங்களுக்கு இடையே நல்ல உரையாடல் நடந்துள்ளது. இந்த பேச்சு வார்த்தை இரு தரப்பிலும் சிறப்பாகச் செல்கிறது என்று நம்புகிறேன். பிரதமர் மோடி சிறந்த, மிகப்பெரிய பிரதமர் என்று சொல்ல விரும்பகிறேன்.

இந்தியா உலகிலேயே அதிகமான வரிவிதிக்கும் நாடாக இருந்தாலும், விரைவில் வரியைக் குறைக்கும் என்று நம்புகிறேன். ஏப்ரல் 2ம் தேதி முதல் பரஸ்பர வரித் திட்டத்தை செயல்படுத்த இருக்கிறோம். எங்களுக்கு எந்த நாடு எந்த சதவீதத்தில் வரிவிதிக்கிறதோ அதே சதவீதத்தில் அந்நாட்டு பொருட்களுக்கும் வரிவிதிப்போம். இந்தியாவில் அனைத்துப் பொருட்களையும் விற்றுவிட முடியாது, கடுமையான கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதிக்கும். அதலால் நாங்கள் விதித்த கட்டுப்பாடுகளை, வரிவீதக் குறைப்பை இந்தியாவும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்தியா விரைவிலேயே எப்-35 ரக போர் விமானங்களை வாங்க இருக்கிறது, இதற்கான பேச்சு அமெரிக்காவுக்கும், இந்திய அதிகாரிகளுக்கும் இடையே நடந்து வருகிறது. இதுதவிர கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் குறித்தும் இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.

இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.

அதிபர் ட்ரம்பின் தொடர் விமர்சனத்தையடுத்து, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் போர்பன் விக்ஸி மதுவுக்கான வரியை 150 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக இந்தியா குறைத்தது. பட்ஜெட்டிலும் சொகுசு கார்கள், சோலார் செல், விலை உயரந்த மோட்டார் சைக்கிள்கள், ஆகியவற்றுக்கான இறக்குமதி வரியை 70 சதவீதமாகக் குறைத்துள்ளது. சராசரி வரி என்பது 11 சதவீதத்துக்கும் கீழ் வந்துவிட்டது.

இதையும் படிங்க: மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம் ! நள்ளிரவில் குலுங்கிய கட்டடங்கள்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share