×
 

பஹல்காம் தாக்குதல் எதிரொலி..! பிரதமர் தலைமையில் கூடியது அமைச்சரவை கூட்டம்..!

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் தொடங்கியது.

காஷ்மீர் பகுதியில் உள்ள பஹல்காமில் தீவிரவாதிகள் நேற்று நடத்திய கொடூர துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுற்றுலா வந்திருந்த அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவ இடத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொண்டதுடன் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநில முதலமைச்சருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசித்ததாக கூறப்பட்டது. 

இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி இந்தியாவில் நிலவும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தனது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். இதனிடையே பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக விவாதிக்க அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: நிலைக்குலைய வைத்த தீவிரவாத தாக்குதல்..! கரம் கொடுக்கும் சவுதி அரேபியா..!

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பகல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது தொடர்பாக தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்… இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share