×
 

பிரதமர் வீட்டுக்கு வந்த ஜே.டி.வான்ஸ்... வீட்டை சுற்றிக்காட்டி குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த மோடி!!

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்சுக்கு தனது வீட்டை சுற்றி காட்டிய பிரதமர் மோடி, அவருக்கு மயிலிறகை பரிசாக கொடுத்தார்.

நான்கு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு வருகை புரிந்தார். குடும்பத்துடன் வருகைபுரிந்த அவரை, பிரதமர் நரேந்திர மோடி உற்சாகமாக வரவேற்றார். அதனை தொடர்ந்து இரு தலைவர்களும் இந்திய -அமெரிக்க உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். முக்கியமாக, இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் உறவு, 'வரிக்கு வரி' கொள்கையின்கீழ் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு விதித்துள்ள வரியும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் இப்பேச்சுவார்த்தையின் போது அமெரிக்க துணை அதிபரிடம் பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்ததாக தெரிகிறது.

பின்னர் ஜே.டி.வான்ஸ்க்கு பிரதமர் மோடி தனது வீட்டை சுற்றிக்காட்டினார். அவரது குழந்தைகளை பிரதமர் மோடி கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் மயிலிறகை பரிசாக கொடுத்த பிரதமர் மோடியை நமஸ்தே சொல்லி ஜே.டி.வான்ஸ் கட்டியணைத்தார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக, இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்க்கு மத்திய அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றிக்கு பிறகு தனது இரண்டாவது வெளிநாட்டு பயணமாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வென்ஸ் குடும்பத்தினருடன் இன்று இந்தியா வந்துள்ளார். 4 நாள்கள் இந்தியாவில் தங்கியிருக்கும் அவர் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியுடனான அசாம் முதல்வரின் சந்திப்பு..! தனது பாக்கியம் என நெகிழ்ச்சி..!

குறிப்பாக இன்று காலை டெல்லியில் உள்ள புகழ் பெற்ற அக்ஷர்தாம் கோயிலுக்குச் சென்றார்.  அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோயிலின் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற அவர் தனது குடும்பத்தாருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்கு பிறகு, பிரதமர் மோடி, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தாருக்கு இரவு உணவு அளிக்க உள்ளதாக கூறப்பட்டது. அதற்காக பிரதமர் மோடியின் இல்லத்தில் சிறப்பு ஏற்பாடுக்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து இன்றைய நிகழ்வுகளை நிறைவு செய்யும் ஜே.டி.வென்ஸ், நாளை முதல் இந்தியாவின் பாரம்பரிய சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க திட்டமிட்டுள்ளார்.

இதையும் படிங்க: வரும் 22, 23ம் தேதி.. சவுதி அரேபியா செல்கிறார் பிரதமர் மோடி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share