தீவிரவாதிகளை அடிச்சு நொறுக்குங்க..! வேட்டையாடுங்க..! முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த மோடி..!
தீவிரவாதத்தை அழிக்க முப்படைகளுக்கு பிரதமர் மோடி முழு சுதந்திரம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி, முப்படை தளபதிகள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றனர். மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் கலந்து கொண்டார். தீவிரவாத தாக்குதலை எப்படி எதிர்கொள்வது, எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பதிலடி கொடுப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, தீவிரவாதத்தை அடியோடு நசுக்க தேசம் உறுதி கொண்டுள்ளதாக ஆலோசனையின் போது பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது. முப்படைகளின் திறன் மீது முழு நம்பிக்கை இருப்பதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. முக்கியமாக, தீவிரவாதத்தை அடியோடு நசுக்கவும்,எங்கு, எப்போது எந்த இலக்குகளை தாக்குவது என்பதிலும் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: ம. பி.யில் வேன் விபத்து..! உயிரிழந்தவர்களுக்கு உடனடி நிவாரணம் அறிவிப்பு..!
இதையும் படிங்க: தீவிரவாத தாக்குதல் எதிரொலி..! அவசர கதியில் நாடு திரும்பும் பிரதமர் மோடி..!