யுனெஸ்கோ பதிவேட்டில் கீதை, நாட்டிய சாஸ்திரம்..! ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என பிரதமர் உற்சாகம்..!
யுனெஸ்கோ பதிவேட்டில் கீதை, நாட்டிய சாஸ்திரம் பொறிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் பொறிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.
இந்த உலகளாவிய கௌரவம் இந்தியாவில் நித்திய ஞானத்தையும், கலை மேதைமையையும் கொண்டாடுவதாகவும், காலத்தால் அழியாத படைப்புகள், இலக்கிய பொக்கிஷங்களை விட மேலானவை என்றும் பாரதத்தின் உலக கண்ணோட்டத்தையும், நாம் சிந்திக்கும், உணரும், வாழும் மற்றும் வெளிப்படுத்தும் விதத்தையும் வடிவமைத்த தத்துவ மற்றும் அழகியல் அடித்தளங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் சர்வதேச பதிவேட்டில் நம் நாட்டிலிருந்து இப்போது 16 கல்வெட்டுகள் உள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இதையும் படிங்க: அமைதி, ஒற்றுமையின் உணர்வு எப்போதும் மேலோங்கட்டும்..! பிரதமர் மோடி புனித வெள்ளி வாழ்த்து..!
இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் இது பெருமையான தருணம் எனக் கூறியுள்ளார். யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் கீதை மற்றும் நாட்டை சாஸ்திரம் சேர்க்கப்பட்டுள்ள நிகழ்வு நமது காலத்தால் அழியாத ஞானம் மற்றும் வளமான கலாச்சாரத்திற்கான உலகளாவிய அங்கீகாரம் என்று தெரிவித்துள்ளார். கீதையும், நாட்டிய சாஸ்திரமும் பல நூற்றாண்டுகளாக நாகரீகத்தையும் நனவையும் வளர்த்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ராமேஸ்வரம் - மன்னார் இடையே மீண்டும் படகு சேவை..இந்தியாவுடன் பேச்சுவார்த்தை.. இலங்கை அதிபர் அறிவிப்பு!