பொள்ளாச்சியில் ஹிந்தி அழித்த திமுகவினரை தூக்கிய ஆர்பிஎப் போலீஸ்..! ஒரே மணி நேரத்தில் பெயர் பலகை சரி செய்து அதிரடி..!
பொள்ளாச்சியில் பெயர் பலகையில் இருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கேரளா, தமிழகம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் ரயில்களுக்கான முக்கிய சந்திப்பு உள்ளது. இந்த சந்திப்பில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் என மூன்று மொழிகளில் பொள்ளாச்சி ரயில் சந்திப்பு என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
சிமென்ட்டாலான பெயர் பலகையில் மஞ்சள் நிறத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டு கருப்பு எழுத்துகளால் எழுதப்பட்ட ஹிந்தி எழுத்துக்களை பொள்ளாச்சி நகர திமுக நிர்வாகிகள் பலர் ஒன்று சேர்ந்து கூட்டமாக சென்று கருப்பு மையிட்டு ஹிந்தி எழுத்துக்களை பெயிண்ட் பிரஷ்ஷால் மொத்தமாக அழித்து முடித்தனர். காலையில் அழித்து முடித்து டிவிகளில் செய்தி ஃப்ளாஷ் ஆக தொடங்கியது.
இதையும் படிங்க: பொள்ளாச்சியில் பரபரப்பு... கேரளாவின் கடைசி நக்சல் தலைவன் கைது...!
இது தொடர்பாக ரயில்வே சேவா என்ற எக்ஸ் இணையதள பக்கத்தில் சிலர் புகார் கூறி இருந்தனர். உடனடியாக இதற்கு ரியாக்ட் செய்த ரயில்வே சேவா அமைப்பினர் இது தொடர்பாக பாலக்காடு ரயில்வே டிவிஷன் ஆர்பிஎஃப் போலீசுக்கு புகார் கொடுத்தனர். இதனை அடுத்து விரைந்து நடவடிக்கை எடுத்த பாலக்காடு டிவிஷன் ஆர்பிஎப் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்களை வெறும் ஒரு மணி நேரத்தில் மீண்டும் பழையபடி மாற்றி அமைத்தனர்.
மேலும் இது தொடர்பாக எந்தெந்த டிவிகளில் செய்தி வெளியானதோ அந்த டிவிக்களின் எக்ஸ் வலைதள பக்கத்தில் டேக் செய்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும், அதேபோன்று அழிக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்கள் உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது என அதனுடைய பதிவில் கமெண்ட் போட்டுள்ளனர்.
ஆர்பிஎஃப் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை எதிர்பார்க்காத பொள்ளாச்சி திமுகவினர் அதிர்ச்சியில் அடைந்து உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக இது போன்ற போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் தலைமையை கவர்வதற்கும் பரபரப்பு செய்திக்காகவும் சிலர் செய்வது வழக்கமான ஒன்று அந்த வகையில் திமுகவினர் இன்று பொள்ளாச்சியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடத்திற்குள் சென்று அங்குள்ள பொருட்களை சேதம் செய்வது என்பது ரயில்வே சட்ட திட்டத்தின்படி குற்றமாக பார்க்கப்படுகிறது
இதனை அடுத்து தான் ரயில்வே ஆர்பிஎப் போலீசார் உடனடியாக சம்பவத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கைக்கு துரிதப்படுத்தி உள்ளனர்
கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பாஜக திமுக இடையிலான இந்தி வேண்டும், வேண்டாம் என்ற போராட்டம் நாளுக்கு நாள் இரு கட்சிகளுக்கிடையே பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது
இதையும் படிங்க: திமுகவே... ஆர்டிகல் 356 தான்..! ஹிந்தி படிக்கிறத தடுத்தா அவ்வளவுதான்..! மிரட்டும் சு.சுவாமி..!