நாட்டின் அசாதாரண சூழல்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
ஜம்மு காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் காரணமாக அசாதாரணமான சூழல் நிலவு வரும் நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. துணைநிலை ஆளுநர் மாளிகை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்பு நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டலுக்கும் மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருந்தனர். உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர் வெடிகுண்டு செயலிழக்கும் பிரிவினர் ஆகியோர் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் சாதனங்களுடன் சென்று சோதனைகள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சோதனைக்கு பிறகு அவை வெறும் புரளி என தெரிய வந்தது. இந்த நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மோப்பநாய் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களில் புரளி என தெரிய வந்து இருந்தாலும், தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் வெடிகுண்டு மிரட்டல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: 14 பேர் சேர்ந்து சிறுமிகளை சீரழித்த கொடூரம்... புதுவையை உலுக்கும் சம்பவம்!
ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தி வரும் நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: திமுக, காங்., எம்.எல்.ஏக்கள் அமளி.. குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டதால் களேபரமான புதுவை சட்டசபை..!