×
 

பொன்முடியின் ஆபாசப் பேச்சு! தப்பு தப்புதான்... கனிமொழி எம்.பி. கண்டனம்..!

சைவ, வைணவ சமயங்களின் குறியீடுகளை உடலுறவோடு ஒப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடிக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

அமைச்சர் பொன்முடி ஏற்கெனவே மகளிர் விடியல் பயணம் தொடர்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது மீண்டும் சமய குறியீடுகளை கொச்சையாக பேசி இருப்பது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் பொன்முடி விலைமாது உடன் சமய நம்பிக்கைகளை ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தப்பா நினைச்சுக்காதீங்க மகளிர். ஒரு விலைமாது வீட்டுக்கு ஒருத்தன் போறான். போகும்போது அங்க அந்த அம்மா கேக்குது, நீங்க சைவமா வைணவமா அப்படின்னு கேக்குது. அவனுக்கு ஒன்னும் புரியல. அவன், பணம் எவ்வளவு? கேட்டான்னா, ரைட், நாம ஒரு விலைமாது வீட்டுக்கு வந்து, சைவமா வைணவமான்னு கேக்குறாங்க...என மிகவும் தரக்குறைவாக பேசும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படிங்க: முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு போட்டியாக ஒரு தலைவரும் கிடையாது.. விஜய்யை ரவுண்டு கட்டும் திமுக தலைவர்கள்.!!

இப்படி மிக கீழ்த்தரமான மொழியில் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை ஒப்பிட்டு பேசி மக்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்கு கடும் கண்டனம் எழுந்தது. ஒரு அமைச்சர் இப்படியா மேடையில் பேசுவது என பலரும் எதிர்ப்புக்குரல் எழுப்பியுள்ளனர். பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

 இந்த நிலையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: உங்களுக்கு எப்படி வலிக்கிறதோ அப்படித்தான் எங்களுக்கும்.. கனிமொழியை அதிர வைத்த அமித் ஷா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share