×
 

இன்று இறுதி புனித நீராடல்..! 62 கோடி பேரை தாண்டிய மகா கும்பமேளா..!

மகா கும்பமேளா பகுதியில் எங்கு திரும்பினாலும் “ஹர ஹர மகாதேவ்” (Hara Hara Mahadev) என்ற கோஷம் ஒலிக்க லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து புனித நீராடி வருகின்றனர்.

இந்துக்களின் புனிதத் திருவிழாவான மகா கும்பமேளா தொடங்கி 45 நாட்கள் நெருங்கி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கத்தில் புனித நீராட பக்தர்கள் தினசரி வந்தனர். அதிலும் இன்று கடைசி புனித நீராடல் என்பதால், நேற்றிலிருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்தவாறு உள்ளனர்.

144 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மகா கும்பமேளா நடக்கும் என்பதால் இந்த கும்மேளா ஜனவரி 13ம் தேதி தொடங்கியது முதல் நாக சாதுக்கள், அகோரிகள், துறவிகள், பக்தர்கள், பொதுமக்கள் தினசரி திரிவேணி சங்கத்தில் புனித நீராடினர்.இதுவரை 64 கோடிக்கும் அதிகமான மக்கள் புனித நீராடியாக உ.பி. அரசு தெரிவித்துள்ளது. 

இன்று மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படுகிறது. இரவு முழுவதும் விழித்திருந்து பூஜைகளில் ஈடுபடும் மக்கள் அதிகாலையில் பிரம்மமுகூர்த்தத்தில் திரிவேணி சங்கத்தில் புனித நீரிடி இறைவனை தரிசிப்பார்கள். இதற்காக லட்சக்கணக்கில் பிரயாக்ராஜ் நகரில் பக்தர்கள் திரண்டுள்ளனர்.

இதையும் படிங்க: மகாகும்பமேளாவில் புனித நீராட நாளையே கடைசிநாள்... 45 நாள் கொண்டாட்டம் நிறைவுக்கு வருகிறது....

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் “ திரிவேணி சங்கத்தில் புனித நீராடி இறைவன் போலேநாத்தை தரிசிக்க வந்திருக்கும் பக்தர்கள், துறவிகள், கல்பவாசிகள் என அனைவருக்கும் என வாழ்த்துகள். ஹர ஹர மகாதேவ்” எனத் தெரிவித்துள்ளார். அரசின் புள்ளிவிவரங்கள்படி அதிகாலை 2 மணி அளவில் வரை 11.66 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கத்தில் புனிதநீராடியுள்ளனர். அடுத்த 2 மணிநேரத்தில் இது இருமடங்காகி, காலை 6மணிக்குள் ரூ.41.11 லட்சத்தை எட்டும் என அரசு தெரிவித்துள்ளது.

இந்த பூமியில் மக்கள் திரண்டு கொண்டாடும் மிகப்பெரிய திருவிழாவாக மகா கும்பமேளா இருந்து வருகிறது. மகா கும்பமேளாவின் கடைசி புனித நீராடல் இன்று நடக்க இருப்பதால் கோடிக்கணக்கில் மக்கள் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரயாக்ராஜ் நகரில் உள்ள கங்கை நதியின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் புனித நீராடி வருகிறார்கள், பக்தர்கள் பாதுகாப்புடன் புனித நீராட போலீஸார் 24 மணிநேரமும் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேற்கு வங்கம், கர்நாடகா, பீகார், டெல்லி, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகளவு பக்தர்கள் வந்து புனிதநீராடியுள்ளனர். நேபாளத்தில் இருந்து பெரிய பக்தர்கள் குழுவினர் மகா கும்பமேளாவுக்கு புனித நீராட வந்துள்ளனர். திரிவேணி சங்கத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 1.33 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். மகாகும்பமேளா முடியும்போது ஏறக்குறைய 65 கோடிக்கும் மேலான மக்கள் புனித நீராடியிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மகா கும்பமேளாவில் 6 புனித நீராடல்கள் கடைபிடிக்கப்படுகின்றன. ஜனவரி 13ம் தேதி பவுர்ணமி நீராடல், 14ம்தேதி மகர சங்கராந்தி, 29ம் தேதி தை அமாவாசை, பிப்ரவரி 3ம்தேதி பசந்த் பஞ்சமி, 12ம் தேதி பவுர்ணமி நீராடல், 26ம் தேதி மகா சிவராத்திரியுடன் அமிர்த ஸ்நானங்கள் முடிகின்றன. பக்தர்கள் லட்சக்கணக்கில் பிரயாக்ராஜை நோக்கி வருவார்கள் என்பதால், நகரில் புனித நீராடல் நடக்கும் பகுதி முழுவதும் எந்த வாகனத்தையும் இயக்கக்கூடாது என்று போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். காவல் டிஜிஐ வைபவ் கிருஷ்ணா தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கும்பமேளாவில் கிடைத்த ‘பன்றிகளுக்கு அழுக்கு... கழுகுகளுக்கு பிணங்கள்…’- யோகி ஆவேசம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share