×
 

இங்கே ஒரு பொத்தானை அழுத்தினால் நிமிடங்களில் எல்லாம் காலி..! அல்லுவிடும் பாகிஸ்தான்..!

1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் பதிப்பை உருவாக்குவதில் இந்தியா மும்முரமாக உள்ளது.

ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிப் பணிகள் அதிகரித்து வருவதால், 90களில் இருந்து நிலைமை நிறைய மாறிவிட்டது. இப்போது பூமியின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் காஷ்மீர், இந்தியாவின் பிற பகுதிகளுடன் ரயில் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. சமீப காலங்களில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சாதனை அதிகரிப்பு பதிவாகியுள்ளது. 

இது பள்ளத்தாக்கு மக்களின் வருமானத்தை அதிகரித்ததுடன், அவர்களின் வாழ்க்கைத் தரத்தையும் மாற்றியது. ஜம்மு காஷ்மீரில் நிலவும் இந்த அமைதியும், செழிப்பும் எதிரி நாடான பாகிஸ்தானுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. அவர்கள் என்ன விலை கொடுத்தாவது சூழ்நிலையைக் கெடுக்க முயன்றனர். இந்த நோக்கத்துடன், பாகிஸ்தான் அரசு இராணுவத்தின் ஆதரவின் கீழ், பயங்கரவாதிகள் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை நடத்தினர்.

பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கையின் அழகை ரசித்துக் கொண்டிருந்த நிராயுதபாணியாக அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நாசவேலை செய்தனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்று காஷ்மீர் பள்ளத்தாக்கை அடைந்த பயங்கரவாதிகள், 26 சுற்றுலாப் பயணிகளை ஒன்றன் பின் ஒன்றாக சுட்டுக் கொன்றனர். இதனால் நாடு முழுவதும் துக்கம், கோபத்தின் சூழல் நிலவுகிறது.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வான்வழிமூடல்.. எகிறப்போகும் இந்தியாவின் விமானக் கட்டணம்..!

பயங்கரவாதிகளும், அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்களும் தப்பிக்க மாட்டார்கள் என்று பிரதமர்  மோடி தெளிவாகக் கூறினார். அப்போதிருந்து பாகிஸ்தானில் குழப்பம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் இப்போதுன் அஞ்சுகிறது. இந்த பயத்திற்குக் காரணம் இல்லாமல் இல்லை. லாகூர், கராச்சி, இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டி போன்ற நகரங்களை  கண் இமைக்கும் நேரத்தில் இடிபாடுகளாக மாற்றும் திறன் கொண்ட துல்லியமான ஏவுகணைகள் இந்தியாவிடம் உள்ளன. இதனால்தான் இந்தியாவின் அணுகுமுறையால் பாகிஸ்தான் பயத்தில் நடுங்குகிறது.

இந்தியா பல தொடர்களில் அக்னில் பாலிஸ்டிக் ஏவுகணை, பிரம்மோஸ் குரூஸ் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ளது. கிட்டத்தட்ட முழு பாகிஸ்தானும் இந்த ஏவுகணைகளின் எல்லைக்குள் உள்ளது. அக்னி ஏவுகணை ஒரு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில், இந்தியா, ரஷ்யாவின் கூட்டு ஏவுகணை முயற்சியான பிரம்மோஸின் சக்தியை உலகம் ஏற்கனவே அறிந்திருக்கிறது. பிரம்மோஸ் ஏவுகணை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 

இந்தியாவின் பாதுகாப்பு பலத்தைக் கண்டு பாகிஸ்தான் பயப்படுகிறது. அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர்கூட இந்தப் பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது பற்றிப் பேசியுள்ளார். தற்போது இந்தியா ராஜதந்திர ரீதியாக தாக்குதல் நடத்தியுள்ளது. ஆனால் தேவைப்பட்டால், முழு பாகிஸ்தானையும் ஒரு சுடுகாடாக மாற்றும் பொத்தானை அழுத்தும் திறனும் இந்தியாவிடம் உள்ளது.

இந்தியாவிலிருந்து பாகிஸ்தானின் முக்கிய நகரங்களுக்கான தூரம்

அமிர்தசரஸில் இருந்து லாகூர் 55 கி.மீ.
பதான்கோட்டில் இருந்து லாகூருக்கு 148 கி.மீ தூரம்.
அமிர்தசரஸிலில் இந்து இஸ்லாமாபாத் 287 கி.மீ.
பதான்கோட்டில் இருந்து இஸ்லாமாபாத் வரையிலான தூரம் 291 கி.மீ.
அமிர்தசரஸ் முதல் ராவல்பிண்டி வரை 276 கி.மீ.
பதான்கோட்டில் இருந்து ராவல்பிண்டி 285 கி.மீ.
பூஜிலிருந்து கராச்சி வரையிலான தூரம் 325 கி.மீ.

இந்தியா பல அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணைத் தொடர்களை வெற்றிகரமாக சோதித்துள்ளது. தூரம், வேகம் மற்றும் அழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், அக்னி-5 ஏவுகணை ICBM அந்தஸ்தைப் பெற்றுள்ளது. அக்னி-5 ஏவுகணை 5500 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. இது அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னி-5 ஏவுகணை ஆசியாவிலும், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா கண்டத்தின் சில பகுதிகளிலும் அமைந்துள்ள இலக்குகளை அழிக்க முடியும். அதன் வேகம் அற்புதமானது, கற்பனை செய்ய முடியாதது. அக்னி-5 ஏவுகணை, ஒலியின் வேகத்தை விட 24 மடங்கு வேகமாக, அதாவது மேக் 24 வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. பாகிஸ்தான் ஏதாவது செய்ய நினைக்கும் நேரத்தில், அக்னி-5 அதற்கு அழிவின் காட்சியைக் காட்டிவிடும்.

பிரம்மோஸ் ஏவுகணை இந்தியா, ரஷ்யாவின் கூட்டு முயற்சி. இந்த ஏவுகணையின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், எதிரி அழிக்கப்படும் வரை அதைத் துரத்துவதை நிறுத்தாது. பிரம்மோஸ் ஏவுகணையின் ஆரம்ப தூரம் 290 கிலோமீட்டர். ஆனால் அதை 500 கிலோமீட்டர் வரை நீட்டிக்க முடியும். சில தகவல்களின்படி, பிரம்மோஸ் ஏவுகணை 800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை அழிக்கும் திறன் கொண்டது. இந்தியாவும் இந்த ஏவுகணைகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இது இந்திய ராணுவம், விமானப்படைக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டது. 1500 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பிரம்மோஸ் ஏவுகணையின் ஹைப்பர்சோனிக் பதிப்பை உருவாக்குவதில் இந்தியா மும்முரமாக உள்ளது. இது மாக்-8 வேகத்தில் (ஒலியின் வேகத்தை விட 8 மடங்கு வேகமாக) பயணிக்கும்.

இதையும் படிங்க: பற்றி எரிந்த பாகிஸ்தான் விமான நிலையம்.. பயங்கரவாதியின் வீடு தரைமட்டம்.. தொடரும் பதற்றம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share