வகுப்பறையில் கல்லூரி மாணவரை மணந்த பேராசிரியை; ராஜினாமா செய்ய முடிவு! நெருக்கடி காரணமா?
வகுப்பறையில் கல்லூரி மாணவரை மணந்த பேராசிரியை..!
பேராசிரியை ஒருவர் கல்லூரி மாணவரை திருமணம் செய்த வீடியோ சமீபத்தில் வைரல் ஆனது. மேற்கு வங்காள மாநிலம் நாடியா மாவட்டத்தில் இருக்கும் மௌலானா அபேல் கலாம் ஆசாத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் இந்தத் திருமணம் நடந்தது.
பயன்பாட்டு உளவியல் பிரிவில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தவர் தான் மணமகன். பேராசிரியையும் அந்த மாணவரும் வங்காள இந்து சமய சம்பிரதாய முறைப்படி, மணமகன் மணமகளுக்கு செந்தூரம் (குங்குமம்) வைத்து இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த வீடியோ எப்படியும் கசிந்து மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் காட்டுத் தீயாய் பரவியது. இதனால் ஏற்பட்ட பரபரப்பை தொடர்ந்து மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருந்தார்.
இதையும் படிங்க: பெண் டாக்டர் பலாத்கார கொலையில் ஆயுள் தண்டனை: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு; உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது
அதன்படி ஐந்து பெண் பேராசிரியைக்ஷகளை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை முடிந்து முடிவு அறிவிக்கப்படும் வரை அந்த பேராசிரியை விடுமுறையில் செல்லும்படி அனுப்பி வைக்கப்பட்டார். அதேபோல் அந்த மாணவரைய அழைத்துப் பேசி அதுவரை பள்ளிக்கு வர வேண்டாம் என்று சொல்லிவிட்டனர்.
இந்த நிலையில் பேராசிரியை பல்கலைக்கழக அலுவலகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை இப்போது அனுப்பி வைத்திருக்கிறார். அந்த மின் அஞ்சல் கடிதத்தில் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் ராஜினாமா செய்வதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பார்த்தா பிரதிம் லஹிரி செய்தியாளர்களிடம் கூறும்போது சம்பந்தப்பட்ட பேராசிரியை மின்னஞ்சல் அனுப்பி வைத்திருப்பது உண்மைதான் என்பதை ஒப்புக்கொண்டார். தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்து பணியில் தொடர இயலவில்லை என்றும் இதுவரை பணிபுரிவதற்கு கிடைத்த வாய்ப்புக்கு பல்கலைக்கழகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மனரீதியாக அவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. அவருடைய இந்த மின்னஞ்சல் கடிதம் குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் "என்று அவர் கூறியிருக்கிறார்.
முன்னதாக இந்த 'நாடக', வடிவிலான திருமணம் கல்லூரியின் பாடத்திட்டத்தை விளக்கும் வகையில் வீடியோ எடுக்கப்படவில்லை என்று விசாரணைக் குழுவின் முடிவில் அறிக்கை தயாரிக்கப்பட்டு இருப்பதாகவும் இதன் காரணமாக அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டு ராஜினாமா செய்யும் முடிவுக்கு அவர் தள்ளப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது பற்றி விளக்கம் கேட்பதற்காக பேராசிரியை பேராசிரியை அல்லது அந்த மாணவர் இருவரிடமும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகின்றன.
இதையும் படிங்க: "திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்கொலைக்கு தூண்டுவதாகக் கருத முடியாது" ! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு