×
 

இன்றும், நாளையும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... எங்கெல்லாம் தெரியுமா? 

17 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால்  இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும்,  வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் எனவும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர்  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. 

இதையும் படிங்க: அடுத்த 3 மணி நேரத்தில் ஷாக்..பொளந்து கட்டப்போகும் கனமழை...!

நாளை மறுநாள் (ஏப்ரல் 5) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி,  ஈரோடு, தேனி, திண்டுக்கல்,  தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி  மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 6ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும், ஏப்ரல் 7 முதல் 9ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்பநிலை எப்படியிருக்கும்? 

ஏப்ரல் 3ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில    இடங்களில் 2 - 3° செல்சியஸ் குறையக்கூடும். வட உள் தமிழகத்தின் ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். ஏப்ரல் 6 மற்றும் 7ம் தேதிகளில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ்  வரை உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: 8 மாவட்டங்களில் வெளுக்கப் போகுது மழை! வானிலை மையத்தின் புது அப்டேட்...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share