×
 

அமைச்சரின் சர்ச்சை கருத்து.. ராஜஸ்தான் சட்டசபையில் விடிய விடிய காங்கிரசார் தர்ணா..!

இந்திரா, ராஜீவ் காந்தி பற்றி அமைச்சரின் சர்ச்சை கருத்தால் ராஜஸ்தான் சட்டசபையில் விடிய விடிய தர்ணா போராட்டம் நடைபெற்றது

நாட்டின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோர் குறித்து பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய வகையில் தெரிவித்த கருத்தைக் கண்டித்து ராஜஸ்தான் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விடிய விடிய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று விடிய விடிய சட்டப்பேரவையில் உள்ளிருப்புப் போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இன்றும் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறுகிறது. ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று ‘லக்பதி தீதி’ திட்டம் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது ராஜஸ்தான் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சரான அவினாஷ் கெலாட், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசினார். இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இதையும் படிங்க: மனதை கலங்கடிக்கும் காட்சி..! ஜிம்மில் வீராங்கனைக்கு நேர்ந்த துயரம்!

6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம்!

அமைச்சரின் கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கோரினர். ஆனால் சபாநாயகர் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால் சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதைத் தொடர்து காங்கிரஸ் மாநிலக் கட்சித் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரே உள்பட 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இந்திரா காந்தி குறித்த சர்ச்சைக் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரியும், தாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது. அநீதி என்பதை வலியுறுத்தியும் 6 காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் உள்பட எம்எல்ஏ.,க்கள் பலரும் சட்டப்பேரவைக்குள் விடிய விடிய உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து இன்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் டிக்காராம் ஜுல்லி, “நாங்கள் அமைதி காக்க தயாராகவே இருக்கிறோம். எங்களது கோரிக்கை ஒன்றே ஒன்று தான். இந்திரா காந்தி குறித்து சர்ச்சைக் கருத்தை அவைக் குறிப்பில் இருந்து சபாநாயகர் நீக்க உத்தரவிட வேண்டும். அவர்கள் அதைச் செய்யத் தயாராக இல்லை. 

அவர்களின் தவறை மறைக்க எங்கள் மீது குற்றத்தை சுமத்த முயல்கின்றனர். நாங்கள் அமளியில் ஈடுபட்டதற்கும், தர்ணா செய்வதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் என்றாலே தர்ணா செய்யும், அமளியில் ஈடுபடும், அவை நடவடிக்கைகளை முடக்கும் என்ற பிம்பத்தை ஏற்படுத்தவே பிரச்சினையை எங்கள் பக்கம் திசை திருப்புகின்றனர்.” என்றார்.

இந்திரா பற்றி என்ன சொன்னார்?

அவர் மேலும் கூறுகையில் இரவில் மூன்று அமைச்சர்கள் மூத்த எம்எல்ஏக்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதனால் எந்த பயனும் இல்லாமல் பாதியில் வெளியே கூட்டம் முடிவடைந்தது. இதனால் தர்ணா தொடர்ந்து நடந்து வருகிறது.

அமைச்சர் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இது போன்ற வார்த்தைகள் நீக்கப்பட்டதற்கு மன்னிக்கவும் முன் உதாரணங்கள் உள்ளன. ஆனால் அரசு இந்த அவையை நடத்த விரும்பவில்லை அதனால் இந்த பிரச்சனை உருவாக மட்டும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

நேற்று சபையில் கீழே நிறத்தின் போது அமைச்சர் அவினாசி கலர் எதிர்க்கட்சிகளை சுட்டிக்காட்டி 2023-24 ஆம் ஆண்டு படிச்சதிலும் எப்போதும் போல நீங்கள் வேலை செய்யும் பெண்கள் விடுதிகளுக்கான திட்டத்திற்கு உங்கள் அப்பா (ராஜீவ் காந்தி) பாட்டி (இந்திரா காந்தி) பெயரை சூட்டினீர்கள் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டு மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் படிங்க: கண்ணா, 2 லட்டு தின்ன ஆசையா? ஆண்களுக்கு இரு மனைவி கட்டாயம்; எந்த ஊரில் தெரியுமா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share