×
 

மோடி, அமித்ஷாவும் தெருத்தெருவா போஸ்டர் ஒட்டி இருக்காங்க..! பிரியங்கா என்ன இளவரசியா..? ராஜ் தீப் அதிர்ச்சி பேட்டி..!

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்து என்ன செய்தார் என பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தன்னை அரசியலில் இளவரசி போல் கருதுகிறார். இத்தனை ஆண்டுகளாக அரசியலில் இருந்து என்ன செய்தார், ஏன் இருக்கிறார் என்று பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் ஒரு நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் சர்தேசாய் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது:

காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி அரசியலில் தன்னை இளவரசியாக நினைத்துக் கொள்கிறார். பிரியங்கா காந்தி மக்களைப் பார்த்து கையை அசைத்தவுடன், பார்ப்பதற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி போல் இருப்பதாலும் மக்கள் வாக்களித்துவிடுவார்கள் என்று பிரியங்கா காந்தி நினைக்கிறார்.

இதையும் படிங்க: ‘முதலில் புரிந்து கொள்ளுங்கள்’.. காங்கிரஸ் எம்.பி மீதான FIR ரத்து.. போலீஸாருக்கு உச்ச நீதிமன்றம் குட்டு..!

பிரமதர் மோடியும், அமித் ஷாவும் 50 ஆண்டுகளாக அரசியலுக்காக தெருக்களில் அலைந்திருக்கிறார்கள், மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து அரசியலில் இந்த உயரத்துக்கு வந்தவர்கள். 1980களில் அகமதாபாத் தெருக்கங்களில் இருவரும் கட்சிக்காக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். 

ஆனால், பிரியங்கா காந்தி ஏன் அரசியலில் இருக்கிறார் ஏனென்றால் ராஜீவ் காந்தி, சோனியா காந்தியின் மகள், இந்திரா காந்தியின் பேத்தி, ஜவஹர்லால் நேருவின் கொள்ளுப்பேத்தி அதானால்தான் அரசியலில் இருக்கிறார்.

பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொள்ளும் துருவ் ராஜே, ராவேஷ் குமார் மற்றும் பிற யூடியூப்பர்கள் யாரும் பத்திரிகையாளர்கள் அல்ல. இவர்கள் சொல்லும் கருத்துக்கள் பிரதமர் மோடிக்கும், அவரின் அரசுக்கு எதிராக இருக்க வேண்டும். அதற்கு ஏற்றார்போல்தான் கன்டென்ட்களை உருவாக்குகிறார்கள், இவை அனைத்தும் மக்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதுதான், அதில் அவர்கள் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு எதிராகப் பேசினால், அதிகஅளவிலான மக்களை கருத்துக்கள் சென்றடையும், விரைவாக பிரபலமடைந்துவிடுவோம், அதிகமான மக்கள் தன்னை பாராட்டுவார்கள் என்று நினைக்கிறார்.

இவ்வாறு ராஜ்தீப் சர்தேசாய் தெரிவித்தார்.

இந்திய அளவில் பிரபலமான பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய். நாட்டின் முன்னணி பத்திரிகைகள் பலவற்றில் ஆசிரியராகவும், சேனல்களில் பலவற்றில் அரசியல் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளரும், பிரதமர்மோடிக்கு எதிரான கருத்துகள் அடிக்கடி வைப்பவருமான ராஜ்தீப் சர்தேசாய் திடீரென பிரியங்கா காந்தியை கடுமையாக விமர்சித்து, பிரதமர் மோடி, அமித் ஷாவை புகழ்ந்திருப்பது அரசியலில் ஏதேனும்  பரபரப்பு மாற்றம் வரப்போகிறது என்பதை குறிக்கிறது. 

இதையும் படிங்க: தூக்கி வீசிட்டு போய்ட்டே இருப்பேன்... அமித் ஷாவுடன் மல்லுக்கட்டும் அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share