கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து மிரட்டி, மதம் மாற கட்டாயப்படுத்தியவன் கைது..!
உத்தரபிரதேசத்தில் வேலை வாங்கி தருவதாக கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், அதை வீடியோவாக எடுத்து மதம் மாறச்சொல்லி மிரட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
உத்தரப் பிரதேசத்தின் சிக்கந்தர்பூர் பகுதியில் ஹர்தியா ஜாமின் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசாத் அன்சாரி (23 வயது). இவர் பாலியா பகுதியில் செயல்படும் கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு பயின்று வரும் 19 வயது மாணவியுடன் நெருங்கி பழகி உள்ளார்.தனக்கு மும்பையில் ஆள் பழக்கம் உள்ளது. அங்கே உனக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி உள்ளார். வறுமையில் இருந்த மாணவி தனக்கு நல்ல வருமானத்தில் வேலை கிடைக்கும் என நம்பி ஆசாத் அன்சாரியுடன் பழகி வந்துள்ளார்.
மாணவி தன்னை நம்புவதை தனக்கு சாதமகாக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டான் ஆசாத் அன்சாரி. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17ம் தேதி அன்று மாணவியை ஹோட்டல் அறை ஒன்றுக்கு ஆசாத் அன்சாரி அழைத்துச் சென்றுள்ளான். அங்கு மாணவிக்கு உணவு பொருட்கள் வாங்கு கொடுத்த் நைசாக பேசி உள்ளான்.
பின்னர் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை மயக்கிய ஆசாத் அன்சாரி, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். அதை வீடியோவாகவும் அன்சாரி பதிவு செய்துள்ளான். அதன் பின்னர் அடிக்கடி அந்த வீடியோவை காட்டி அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளான் ஆசாத் அன்சாரி.
இதையும் படிங்க: ஆசையாய் நூடுல்ஸ் வாங்கி வந்த கணவன்.. சண்டையிட்டு சாப்பிட மறுத்த மனைவி.. கழுத்தை நெறித்து கொன்ற விபரீதம்..!
இந்நிலையில் கடந்த மார்ச் 11 ஆம் தேதி அந்த மாணவிக்கு கல்லூரியில் தேர்வு ரிசல்ட் வெளியானது. பாதிக்கப்பட்ட பெண் தனது தேர்வு ரிசல்ட்டை பார்க்க கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பி உள்ளார். ஆனால் கல்லூரிக்கு செல்லும் வழியில் அன்சாரி அந்த பெண்ணை வீடியோ காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது. பிறகு அந்த பெண்ணை மிரட்டி மும்பைக்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு அந்த பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாறி தன்னை திருமணம் செய்து கொள்ள ஆசாத் அன்சாரி வற்புறுத்தியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுதொடர்பாக உத்தரப் பிரதேச போலீசில் புகார் அளித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரை அடுத்து நேற்று ஆசாத் அன்சாரி மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் உத்தரபிரதேச சட்டவிரோத மதமாற்ற தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பபட்டதாகவும், மருத்தவ அறிக்கையை பொறுத்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தர பிரதேச போலீஸ் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பூனைக்காக அக்கப்போரா? - உயிரையே விட்ட பெண்!!