தமிழக மக்களை முட்டாளாக்க முடியாது... ஜெயலலிதா அவமானப்படுத்தப்பட்டதை வரலாறு மறக்காது- தர்மேந்திர பிரதான்..!
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல. தேசியக் கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை.
''யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார்'' என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கோரியுள்ளார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாகரீகமற்றவர்கள் எனக்கூறிய விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மாநிலங்களவையில் மன்னிப்பு கோரினார். இதுகுறித்து அவர், மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''எனது தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர். நான் தமிழகத்தின் மைந்தன். யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கோருகிறேன் மன்னிப்பு கேட்க தயார். யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயார். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தமிழருக்கும், தமிழகத்திற்கும் எதிரானது அல்ல. தேசியக் கல்விக்கொள்கையில் எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை.
கனிமொழி எனக்கு சகோதரி. நான் தவறாக பேசி இருந்தால் மன்னிப்புக் கேட்கிறேன். 100 முறை மன்னிப்பு கேட்கவும் எனக்கு பிரச்னை இல்லை'' என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் பின்வாங்கிய திமுக.. எதற்காக இந்த பொய் பிரச்சாரம்? புள்ளி விவரங்களுடன் வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி..!
நீங்கள் என்னை முட்டாள் என கூறலாம். ஆனால் தமிழக மக்களை எல்லா நேரத்திலும் முட்டாளாக்க முடியாது. பழங்கால சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள். தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையை ஆதரிப்பவர்களுடைய சொந்தப் பள்ளிகளில் தமிழ் மொழி சரிந்து கொண்டிருக்கிறது.
தேசிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியையே ஊக்குவிக்கிறது .ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனி மகத்துவம் உள்ளது. எந்த மொழியும் யார் மீதும் திணிக்கப்படவில்லை. எந்த மொழியை படிக்க வேண்டும் என்பது அவரவர் விருப்பம்.
தமிழக சட்டமன்றத்தில் மிகச் சிறந்த தலைவர் ஆன ஜெயலலிதா எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை வரலாறு ஒருபோதும் மறக்காது'' என்பதையும் தர்மேந்திர பிரதான் சுட்டிக் காட்டிப்பேசினார்.
இதையும் படிங்க: எங்கள மட்டும் ஏன் அரெஸ்ட் பண்றீங்க..! போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் வாக்குவாதம்..!