அடேங்கப்பா..! இத்தனை கோடி செலவா..! பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயண செலவை வெளியிட்டது மத்திய அரசு..!
பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.258 கோடி செலவாகியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022 முதல் 2024 டிசம்பர் வரை 38 வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ளார், இதற்காக ரூ.258 கோடி செலவாகியுள்ளது என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பிரதமர் மோடியின் இந்த பயணத்திலேயே மிகவும் காஸ்ட்லியான டூர் என்பது, 2023, ஜூன் மாதம் அமெரிக்கா சென்றதுதான். அந்த பயணத்துக்கு மட்டும் மத்திய அரசு ரூ. 22 கோடி செலவிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணத்துக்கு மத்திய அரசு எவ்வளவு செலவிட்டுள்ளது, எந்தெந்த நாடுகளுக்கு சென்றார், ஒவ்வொரு நாட்டிலும் செலவு எவ்வளவு என்று காங்கிரஸ் மாநிலங்களவை எதிர்க்கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி இருந்தார்.
இதையும் படிங்க: காங்கிரஸ்காரங்க இவரை மாதிரி இருக்கணும்..! சசி தரூரைப் பாராட்டிய பாஜக..!
இதற்கு மத்திய வெளியுறவுத்துறை இணைஅமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா மாநிலங்களவையில் எழுத்துபூர்வமாக பதில் அளித்தாவது:
பிரதமர் மோடி 2022 முதல் 2024 டிசம்பர் வரை 38 நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார். இந்த பயணத்தில் அவருடன் அதிகாரிகள், பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் சென்றனர். பிரதமர் மோடியின் இந்த பயணத்துக்கு மத்திய அரசு சார்பில் ரூ.258 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் 2023, ஜூன் மாதம் அமெரிக்கா பயணத்துக்கு மட்டும் ரூ.22 கோடியே 89 லட்சத்து 68 ஆயிரத்து 509 செலவிடப்பட்டுள்ளது. அதேபோல 2024 செப்டம்பரிலும் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தார், அப்போது ரூ.15 கோடியே 33 லட்சத்து 76 ஆயிரத்து 348 கோடி செலவானது.
2023 மே மாதம் பிரதமர் மோடி ஜப்பான் சென்றார், அதற்கு ரூ.17.19 கோடிசெலவானது, 2022மே மாதம் நேபாளம் சென்றபோது, ரூ.80 லட்சம் செலவானது. 2022ம் ஆண்டில் பிரதமர் மோடி, டென்மார்க், பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், உல்பெகிஸ்தான், இந்தோனேசியா நாடுகளுக்கு சென்றிருந்தார். 2023ம் ஆண்டில் பிரதமர் மோடி ஆஸ்திரேலியா, எகிப்து, தென் ஆப்ரிக்கா, க்ரீஸ் நாடுகளுக்கும், 2024ம் ஆண்டில் போலந்த், உக்ரைன், ரஷ்யா, இத்தாலி, பிரேசில், கயானா நாடுகளுக்கும் பிரதமர் மோடி பயணித்துள்ளார்.
2024ம் ஆண்டில் பிரதமர் மோடி போலந்து செல்ல ரூ.10.10 கோடியும், உக்ரைன் செல்ல ரூ.2.52 கோடியும், ரஷ்ய பயணத்துக்கு ரூ.5.34 கோடியும், இத்தாலி செல்ல ரூ.14.36 கோடியும் செலாவகியுள்ளது. பிரேசில் பயணத்துக்கு ரூ.5.51 கோடியும், கயானா செல்ல ரூ.5.45 கோடியும் செலவாகியுள்ளது.
2011ம் ஆண்டில் காங்கிரஸ் சார்பில் பிரதமராக இருந்த மறைந்த மன்மோகன் சிங் பல்வேறு நாடுகளுக்கு பயணம் சென்றிருந்தார். அவரின் செலவுகளையும் பட்டியலிடுகிறோம். 2011ம் ஆண்டில் அமெரிக்கா செல்ல ரூ.10.74 கோடியும், 2013ம் ஆண்டில் ரஷ்யா யணத்துக்கு ரூ.9.95 கோடியும், 2011ம் ஆண்டில் பிரான்ஸ் பயணத்துக்கு ரூ.8.33 கோடியும், 2013ல் ஜெர்மனி பயனத்துக்கு ரூ.6.02 கோடியும் செலவானது.
பணவீக்கத்துக்கு ஏற்பவும், டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு சரிவையும் கணக்கிடமால் உண்மையான செலவினங்களை வழங்கியுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெல்கம் #crew9... பூமி உங்கள ரொம்ப மிஸ் பண்ணுச்சு.. விண்வெளி வீரர்களை வரவேற்ற பிரதமர்..!