×
 

ரூ.500க்கு சிலிண்டர், 300 யூனிட் இலவச மின்சாரம்.. டெல்லியில் காங்கிரஸ் கட்சி தாராளம்!

டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கு ரூ.2500, சமையல் எரிவாயு ரூ.500-க்கு , இலவச ரேஷன் கிட் வழங்கப்படும் என்று காங்ரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது.

டெல்லியில் உள்ள 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு பிப்ரவரி 5இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தல் மெதுவாக சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்லிக்கான உத்தரவாதங்கள் என்கிற பெயரில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பண வீக்கம் இல்லாத திட்டங்களை அறிமுகம் செய்து வைத்தார்.

பெண் வாக்காளர்களைக் கவரும் விதமாக காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.2,500 வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது.  ‘ஜீவன் ரக்ஷா யோஜனா’என்கிற திட்டத்தின்படி ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு வழங்கப்படும். படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவும் வகையில், ஓர் ஆண்டுக்கு மாதம் தோறும் ரூ.8,500 வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. சமையல் எரிவாயு ரூ.500-க்கும், 300 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் இலவச ரேஷன் கிட் ஆகியவை வழங்கப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது.

காங்கிரஸ் கட்சி 1998, 2003, 2008 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்க வைக்க ஆம் ஆத்மி முயற்சித்து வருகிறது. 1998இல் ஆட்சியை இழந்த பாஜக, மீண்டும் டெல்லியில் ஆட்சிக்கு வரவில்லை. அந்தக் குறையைப் போக்க பாஜகவும் தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் 2013இல் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் வெற்றி பெற வியூகங்களை வகுத்து வருகிறது. எனவே, கவர்ச்சிக்கரமான திட்டங்களை தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: "பா.ஜ.க. பதிவை 'எக்ஸ்' வலைத் தளத்தில் ரகசியமாக பகிர்ந்த டெல்லி தேர்தல் அதிகாரி" : ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

இதையும் படிங்க: அரவிந்த் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல்: அமலாக்கப் பிரிவு நடவடிக்கையலிருந்து தப்புவாரா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share