சென்னையை தொடர்ந்து சேலத்திலும் மெட்ரோ..? தமிழக அரசு பரிசீலனை..!
சென்னையைத் தொடர்ந்து சேலத்தில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கான அறிக்கை தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையின் பல்வேறு பகுதிகளில் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட திட்ட பணிகள் 116 கிலோமீட்டருக்கு 3 கிலோமீட்டர் க்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திட்டம் வளர்ச்சி சிறப்பான முயற்சிகள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை உள்ளிட்ட துறைகளுக்கான கொள்கை விளக்க குறிப்பு இன்று சட்டசபையில் முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: குடமுழுக்கு தொடர்பாக நாம் தமிழர் தாக்கல் செய்த மனு.. அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு..!
அந்த குறிப்பில், அதில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் போக்குவரத்து துறைக்கான தீர்வாக கோவை, மதுரை, சேலம், திருச்சி மற்றும் நெல்லை ஆகிய 2-ம் நிலை நகரங்களில் மெட்ரோ ரெயில் திட்டங்களை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கைகளை அரசுக்கு சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சமர்ப்பித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை பொறுத்தவரை, துரித போக்குவரத்து அமைப்பை ஏற்படுத்த உகந்த சூழல் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சேலத்தை பொறுத்தவரை விரிவான சாத்தியக்கூறு அறிக்கை அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும், சென்னையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தை செயல்படுத்துவதற்காக அரசு நிதிச் சுமையை கருத்தில் கொண்டு திருச்சியில் மெட்ரோ ரயில் அமைக்கும் நடவடிக்கைகள் பின்னர் தொடரலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் 28.36 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என்றும் இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பெண்களுக்கு உரிய தரமான வேலைவாய்ப்பு திட்டம் ஒன்று ரூ.50 லட்சம் செலவில் ஒப்பந்த அடிப்படையிலான நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்படும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏப்ரல் 21-க்குள் கொடிக் கம்பங்களை அகற்றுங்கள்.. தமிழக அரசுக்கு கெடு விதித்த நீதிமன்றம்..!